சீசியம் அவ்ரைடு

சீசியம் அவ்ரைடு (Caesium auride-CsAu) வழக்கத்தில்  அல்லாத Au அயனியைக் கொண்டுள்ள அயனிச் சேர்மமாகும். இச்சேர்மம் முதன் முதலில் 1978 ஆம் ஆண்டு ஜோசப் லாகோவ்சுகி[2] என்ற வேதியியலாளரால் ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது. இது சீசியம் மற்றும் தங்கம் ஆகிய தனிமங்களைக் கொண்ட ஒரு விகிதாச்சாரக் கலவையை வெப்பப்படுத்துவதன் மூலம் கிடைக்கிறது. இந்த இரண்டு உலோக மஞ்சள் நிறத் திரவங்களும் வினைபுரிந்து ஒரு விளைபொருளைத் தருகிறது.  திரவ அம்மோனியாவில் இந்தக் கரைசலானது பழுப்பு நிறத்தில் உள்ளது. திண்ம நிலையில் இந்த சேர்மமானது இதில் கூடியுள்ள தனிமங்களின் நிறத்திலிருந்து பெறப்பட்டதாக உள்ளது. இதன் அம்மோனியம் சேர்க்கை சேர்மமானது கரு நீல நிறத்தைக் கொண்டுள்ளது. இரண்டு உலோகங்களிலிருந்து பெறப்பட்ட சேர்மமாக இருப்பினும், உலோகங்களில் காணப்பட்ட கட்டற்ற எதிர்மின்னிகள் மற்ற அனைத்து அயனிச்சேர்மங்களில் காணப்படுவதைப் போன்றே உபயோகப்படுத்தப் பட்டுவிட்டதால் CsAu உலோகப் பண்புகளில் பின்தங்கியே உள்ளது.

சீசியம் அவ்ரைடு
இனங்காட்டிகள்
12256-37-0 N
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
CsAu
தோற்றம் மஞ்சள் படிகங்கள்
உருகுநிலை
கட்டமைப்பு
படிக அமைப்பு பொருள் மைய கனசதுரம்
Lattice constant a = 4.24Å[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

இந்தச் சேர்மம் நீருடன் தீவிரமாக வினைப்பட்டு சீசியம் ஐதராக்சைடு, உலோக நிலைத் தங்கம், ஐதரசன் வாயு ஆகியவற்றைத் தருகிறது. திரவ அம்மோனியாவில், இது தெரிவு செய்யப்பட்ட சீசிய அயனிப் பாிமாற்றப் பிசினுடன் வினைப்பட்டு டெட்ராமெதில்அம்மோனியம் அவ்ரைடைத் தருகிறது.[3]

மேற்கோள்கள்

  1. W.J. Peer and J.J. Lagowski (1978), J. Am. Chem.
  2. Jansen, Martin (2005-11-30). "Effects of relativistic motion of electrons on the chemistry of gold and platinum". Solid State Sciences 7 (12): 1464–1474. doi:10.1016/j.solidstatesciences.2005.06.015.

கூடுதல் வாசிப்பிற்கு

  • Jansen, Martin (2008). "The chemistry of gold as an anion". Chemical Society Reviews 37 (9): 1826–1835. doi:10.1039/B708844M.—includes photograph of the chemical
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.