சிவக்கொழுந்து தேசிகர்

சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிற்றிலக்கியப் புலவர் ஆவார்.

சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள கொட்டையூர் என்னும் இடத்தவர். இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக இருந்தவர். மருத்துவ நூல்கள் பலவற்றை செய்யுள் வடிவில் எழுதி வைத்துள்ளார். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்கப் பல ஏட்டுச் சுவடிகளைச் சேர்த்துத் தொகுத்துள்ளார்.

எழுதிய நூல்கள்

  • சரபேந்திர பூபாளக் குறவஞ்சி என்ற நாடக நூல் சரபோஜி மன்னர் மீது பாடப்பட்டது.
  • கோடீச்சரக் கோவை
  • கொட்டையூர் உலா
  • திருவிடைமருதூர்ப் புராணம்
  • திருமண நல்லூர்ப் புராணம்
  • சரசக் கழிநெடில்
  • தஞ்சைப் பெருவுடையார் உலா

உசாத்துணை

தமிழ் இலக்கியக் கல்விக்கழகப் பாடப்பகுதி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.