இலங்கை சுதந்திரக் கட்சி
இலங்கை சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party; ශ්රී ලංකා නිදහස් පක්ෂය) இலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.
இலங்கை சுதந்திரக் கட்சி Sri Lanka Freedom Party ශ්රී ලංකා නිදහස් පක්ෂය | |
---|---|
![]() | |
தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
நிறுவனர் | எஸ். டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்கா |
செயலாளர் | அனுர பிரியதர்சன யாப்பா |
தொடக்கம் | செப்டம்பர் 2, 1951 |
பிரிந்தவை | ஐக்கிய தேசியக் கட்சி |
முன்னர் | சிங்கள மகா சபை |
தலைமையகம் | 307 து. பு. ஜாயா மாவத்தை, கொழும்பு 10 |
செய்தி ஏடு | சிங்களே, தினகர |
கொள்கை | சமூக சனநாயகம் |
அரசியல் நிலைப்பாடு | நடு-இடது |
தேசியக் கூட்டணி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (2004 – இன்று) மக்கள் கூட்டமைப்பு (1994 – 2004) |
நிறங்கள் | Blue |
நாடாளுமன்றம் | 80 / 225 |
மாகாணசபைகள் | 269 / 417 |
உள்ளூராட்சி சபைகள் | 2,611 / 4,327 |
தேர்தல் சின்னம் | |
கை ![]() | |
இணையதளம் | |
www.slfp.lk |
ஏப்ரல் 2 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
ஆரம்பம்
இ.சு.க. 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றிய கட்சியாகும். சிங்கள மகா சபையானது 1945 பொதுத் தேர்தல் வரை ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்து வந்தது. ஐ.தே.க. ஆட்சியில் பண்டாரநாயக்காவுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்ற என்னம் சிங்கள மகா சபைக்கு காணப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தனது அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு பதில் பிரதமர் பதவியை கொடுக்க மறுத்ததை காரணம் காட்டி 1951 இல் ஐ.தே.கவுக்கான தனது ஆதரவை விலக்கி கொண்டது. 1951இல் பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். புதிய கட்சிக்கு இலங்கை சுதந்திர கட்சி யென்ற பெயர் இடப்பட்டது.