சினிங்
சினிங் (Xining, எளிய சீனம்: 西宁 சினிங், ஜிலிங்) என்பது மேற்கு சீனாவின் சிங்கை மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[3] திபெத்திய பீடபூமியில் இதுவே மிகப் பெரிய நகரமாகும். 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 2,208,708 ஆகும் அதில் 1,198,304 பேர் நான்கு நகர்ப்புற மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[4]
சினிங் 西宁市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
![]() கடிகாரச் சுற்றாக மேலிருந்து: மா புஃபங் மேன்சன், துவோபா பள்ளிவாசல், டோங்குவான் பள்ளிவாசல், கும்பும் மடாலயம். | |
![]() சிங்கையில் சினிங் நகர எல்லையின் அமைவிடம் | |
![]() ![]() சினிங் | |
ஆள்கூறுகள்: 36°38′N 101°46′E | |
நாடு | சீனா |
மாகாணம் | சிங்கை |
அரசு | |
• கட்சி செயலாளர் | வாங் ஜியாவோ |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 7,372 |
• நகர்ப்புறம் (2018)[1] | 189 |
• Metro | 343 |
ஏற்றம் | 2,275 |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) | |
• மாவட்டநிலை நகரம் | 22,08,708 |
• அடர்த்தி | 300 |
• நகர்ப்புறம் (2018)[2] | 1 |
• நகர்ப்புற அடர்த்தி | 7 |
• பெருநகர் | 11,98,304 |
• பெருநகர் அடர்த்தி | 3 |
நேர வலயம் | சீன நேரம் (ஒசநே+8) |
அஞ்சல் எண் | 810000 |
தொலைபேசி குறியீடு | 971 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | CN-QH-01 |
வாகன உரிமம் தட்டு முன்னொட்டுகள் | 青A |
இணையதளம் | www.xining.gov.cn (சீனம்) |
சினிங் | |||||||||||||||||||||||||||||||||
![]() "சினிங்" என்பது பாரம்பரிய (மேல்) மற்றும் எளிய (கீழ்) சீன எழுத்துகளில் | |||||||||||||||||||||||||||||||||
Chinese name | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 西宁 | ||||||||||||||||||||||||||||||||
பண்டைய சீனம் | 西寧 | ||||||||||||||||||||||||||||||||
Postal | சினிங் அல்லது ஜிலிங் | ||||||||||||||||||||||||||||||||
Literal meaning | "மேற்கத்திய அமைதி" | ||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||
திபேத்தியப் பெயர் | |||||||||||||||||||||||||||||||||
Tibetan | ཟི་ལིང | ||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||
Mongolian name | |||||||||||||||||||||||||||||||||
Mongolian Cyrillic | Сэлэнг | ||||||||||||||||||||||||||||||||
மொங்கோலிய எழுத்துமுறை | ᠰᠢᠨᠢᠩ | ||||||||||||||||||||||||||||||||
|
இந்நகரம் வடக்குப்பட்டுப் பாதையின் ஹெக்ஷி நடைபாதையுடன் சேர்ந்த வணிக இடமாகச் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. மேற்கிலிருந்து வரும் நாடோடிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்புக்கான ஒரு கோட்டையாக ஹான், சுயி, தாங் மற்றும் சாங் அரசமரபினருக்கு இப்பகுதி இருந்து வந்துள்ளது. இது பல காலமாக கன்சு மாகாணத்தின் பகுதியாக இருந்துள்ளது. 1928ல் சிங்கை மாகாணத்தில் இணைக்கப்பட்டது. இது மத ரீதியாக முஸ்லிம்கள் மற்றும் புத்த மதத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த டோங்குவான் பள்ளிவாசல் மற்றும் தயேர் மடாலயம் ஆகிய தளங்களைக் கொண்டுள்ளது. இந்நகரம் ஹுவாங்ஷுயி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதியில் அமைந்திருப்பதால் இது குளிர்ந்த பகுதி வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது லாசா மற்றும் திபெத் ஆகிய பகுதிகளுக்கு ரயில் மூலமும் லான்சோவு, கன்சு மற்றும் க்ஷின்ஜியாங்கின் உரும்கி ஆகிய பகுதிகளுக்கு வேகமான ரயில் மூலமும் இணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
சினிங் 2100 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.[5] திபெத்திற்கான ஹெக்ஷி நடைபாதை வணிகவண்டி வழித்தடத்தில் முதன்மை வணிக மையமாக இருந்துள்ளது. இங்கு முக்கியமாக மரம், கம்பளி மற்றும் உப்பு ஆகியவை பழங்காலத்தில் வணிகம் செய்யப்பட்டுள்ளன. ஹெக்ஷி நடைபாதையுடன் சேர்ந்த வணிகமானது ஒரு பெரிய வணிக நடைபாதையான வடக்குப்பட்டுப் பாதையின் ஒரு பகுதியாகும். வடக்குப் பட்டுப்பாதையின் உபயோகமானது கி.மு. 1ம் நூற்றாண்டில் ஹான் அரசமரபினர் இதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தபோது அதிகரித்தது.[6]
ஹான் அரசமரபின் (கி.மு. 206 – கி.பி. 220) கீழ் உள்ளூர் சியாங் பழங்குடியினரைக் கட்டுப்படுத்த லிங்கியாங் கவுன்டி ஏற்படுத்தப்பட்டது. இது எல்லைப்புறக் கவுன்டியாக சுயி (581–618) மற்றும் தாங் (618–907) அரசமரபினரின் கீழ் மீண்டும் இருந்தது. 7ம் மற்றும் ஆரம்பகால 8ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இது துயுகுன் மற்றும் திபெத்திற்கு இடையேயான தொடர்ந்த போரின் ஒரு மையமாக இருந்தது. 763ல் திபெத்தியர்கள் இதனை வென்றனர். திபெத்தியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இது சிங்டங்செங் என்று சீனர்களால் அழைக்கப்பட்டது. 1104ல் சாங் அரசமரபினரால் இது மீட்டெடுக்கப்பட்டது. இதற்கு சினிங் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இதன் பொருள் "மேற்கிலுள்ள அமைதி" என்பதாகும். அன்று முதல் இது ப்ரிபெக்சர் அல்லது பெரிய ப்ரிபெக்சரின் தலைமையிடமாக இருந்து வந்துள்ளது. பிந்தைய 16ம் நூற்றாண்டில் சுமார் 19 km (12 mi) தென்கிழக்கில் கும்பும் மடாலயம் நிறுவப்பட்டது. இதனால் பௌத்தர்களின் கெலுக் பள்ளியின் ஒரு முக்கியமான மத மையமாக சினிங் உருவானது.
மே 22, 1927ல் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆகப் பதிவான ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. சீனாவில் ஏற்பட்ட பூகம்பங்களிலேயே இது மிகுந்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய பூகம்பங்களுள் ஒன்றாகும். இதில் சுமார் 40,000 பேர் இறந்தனர். நிலப்பகுதியிலும் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.
சினிங் நகரமானது கோகோ நோரின் எல்லைக்கு வெளியிலிருந்து கட்டுப்படுத்திய ஒரு தலைநகரமாக ஆனது. இது 1928 வரை கன்சுவில் இருந்தது. பிறகு புதிதாக நிறுவப்பட்ட சுதந்திர மாகாணமான சிங்கையின் மாகாணத் தலைநகரமானது.[7][8]
1941ல் இரண்டாம் சீன ஜப்பான் போரில் சினிங் ஜப்பானியப் போர் விமானங்களால் வான்வழித் குண்டுவீச்சுக்கு உள்ளானது. இந்தத் குண்டுவீச்சு உள்ளூர் சிங்கை மங்கோலியர்கள் மற்றும் சிங்கை திபெத்தியர்கள் உள்பட அனைத்து இனத்தை சேர்ந்த மக்களையும் ஜப்பானியர்களுக்கு எதிராகத் தூண்டியது.[9][10] சலர் முஸ்லிம் தளபதியான ஹான் யூவென் ஜப்பானிய விமானங்களின் வான்வழித் தாக்குதலின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார். ஹான் சிங்கையில் ஜப்பானிய விமானங்களின் வான்வழி குண்டுவீச்சில் இருந்து தப்பித்தார். அப்போது மா புஃபங்கிடம் இருந்து ஹான் தொலைபேசியில் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். மா புஃபங் வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு ராணுவ முகாமில் பதுங்கிப் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தாக்குதலால் ஹான் இடிபாடுகளுக்கிடையில் சிக்கினார். பின்னர் அதிலிருந்து மீட்டு எடுக்கப்பட்டார். இரத்தம் சிந்திக் கொண்டிருந்த அவர் ஒரு இயந்திரத் துப்பாக்கியை எடுத்து ஜப்பானிய போர் விமானங்கள் மீது சுட்டுக் கொண்டு தனது சொந்த மொழியில் ஜப்பானியர்களை நாய்கள் என்று திட்டினார்.[11][12][13][14]
சினிங் மீது ஜப்பானியப் போர் விமானங்கள் குண்டுவீசியபோது போது மா புகாங் மற்றும் மா புஃபங் ஆகியோர் மா பியாவோ பற்றிய ஒரு விவாதத்தில் இருந்தனர்.[15]
சினிங் 1945ல் நகராட்சி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
ஆளுநர் மா புஃபங்கின் ஆட்சியின் கீழ் மற்ற சிங்கை பகுதிகளைப் போலவே சினிங்கும் தொழில்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு உட்பட்டது. 1947ல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஒரு குழாய் நீர் (கழிவுநீர்) அமைப்பை மா புஃபங்கிற்கு விற்றது. இது சினிங்கில் பொருத்தப்பட்டது.[16] மா புஃபங் கல்விக்கும் ஊக்கமளித்தார். சினிங்கை முறையாகச் சுத்தம் செய்வதற்காக இவர் வர்த்தகர்களைப் பூச்சி அழிப்பவர்களாகப் பயன்படுத்தினார். ஈக்களைக் கொன்று அப்பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க செய்தார்.[17]
அருகிலுள்ள கன்சு மாகாணத்தில் லியுஜியா ஜார்ஜ் அணை மற்றும் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து சினிங் உயர் மின் அழுத்த மின்சாரக் கட்டத்தால் லியுஜியா மற்றும் லன்சோவுடன் 1950களில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. இது வடக்கிலுள்ள டடோங்க்ஷியனில் உள்ள சுரங்கங்களிலிருந்து உள்ளூர் நிலக்கரியையும் பயன்படுத்துகிறது. 1957க்கு முன் சினிங்கில் ஒரு நவீன கம்பெனி ஆலை நிறுவப்பட்டது. இந்நகரம் ஒரு தோல் தொழில் மற்றும் கைதம் பகுதியில் இருந்து வரும் உப்புக்கு ஒரு சந்தையாகவும் உள்ளது. 1950களில் நடுத்தர அளவுடைய இரும்பு மற்றும் உருக்குத் தொழில் இங்கு நிறுவப்பட்டன. இங்கிருந்து லன்சோவுக்கு உலோகம் கொடுக்கப்பட்டது.
கனிம வளமிக்க கைதம் படுகைக்கான ஒரு நெடுஞ்சாலையின் கட்டமைப்பு மற்றும் 1959ல் முடிக்கப்பட்ட கன்சு மாகாணத்திலுள்ள லன்சோவு வழியான சீன ரயில் இணையத்துடனான ஒரு தொடர்பு ஆகியவை இங்கு தொழில்துறை வளர்ச்சியை தூண்டின. சீனாவிலுள்ள எண்ணெய் மற்றும் மேய்ச்சல் வளங்களை வேகமாக சுரண்ட மத்திய அரசாங்கத்தால் 1950களில் தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் பகுதியே இந்த முயற்சியாகும்.[18]
மேற்கோள்கள்
- Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf.
- Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf.
- "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்த்த நாள் 2014-05-17.
- {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "" (Chinese). 西宁市统计局 (14 May 2011). பார்த்த நாள் 17 July 2015.
- Archived September 29, 2007, at the வந்தவழி இயந்திரம்.
- "Silk Road, North China [Northern Silk Road, North Silk Road] Ancient Trackway : The Megalithic Portal and Megalith Map:". Megalithic.co.uk. பார்த்த நாள் 2014-02-07.
- Frederick Roelker Wulsin, Joseph Fletcher, Peabody Museum of Archaeology and Ethnology, National Geographic Society (U.S.), Peabody Museum of Salem (1979). Mary Ellen Alonso. ed. China's inner Asian frontier: photographs of the Wulsin expedition to northwest China in 1923 : from the archives of the Peabody Museum, Harvard University, and the National Geographic Society (illustrated ). The Museum : distributed by Harvard University Press. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-674-11968-1. https://books.google.com/books?ei=_8_lTffGIMrq0gGQw6iZCw&ct=result&id=WltwAAAAMAAJ&dq=Like+his+father+before+him%2C+Ma+Bufang+maintained+as+tight+a+control+as+possible+over+the+entire+area+of+Qinghai%2C+keeping+the+Tibetan+and+Mongolian+tribes+in+line.+In+1932+he+joined+forces+with+the+governor+of+Sichuan+to+reassert+Chinese&q=sichuan+reassert. பார்த்த நாள்: 2010-06-28.(Original from the University of Michigan)
- Graham Hutchings (2003). Modern China: a guide to a century of change (illustrated, reprint ). Harvard University Press. பக். 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-674-01240-2. https://books.google.com/books?id=qhe6vP66jN0C&pg=PA351&dq=They+did+not,+however,+control+political+life+in+the+province.+This+was+in+the+hands+of+the+Ma+clan+of+Hui+Muslims,+the+third+most+numerous+ethnic+group+after+the+Han+and+the+Tibetans.+Governor+Ma+Bufang+(19o2-75)+dominated+Qinghai&hl=en&ei=ktXlTe2KLYbZgQf-59CECw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=They%20did%20not%2C%20however%2C%20control%20political%20life%20in%20the%20province.%20This%20was%20in%20the%20hands%20of%20the%20Ma%20clan%20of%20Hui%20Muslims%2C%20the%20third%20most%20numerous%20ethnic%20group%20after%20the%20Han%20and%20the%20Tibetans.%20Governor%20Ma%20Bufang%20(19o2-75)%20dominated%20Qinghai&f=false. பார்த்த நாள்: 2010-06-28.
- http://www.krzzjn.com/html/28977.html
- http://dangshi.people.com.cn/n/2013/0816/c85037-22593706.html
- http://blog.sina.com.cn/s/blog_76362eba0102vr6f.html
- "Archived copy". மூல முகவரியிலிருந்து March 22, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 3, 2011.
- http://product.dangdang.com/23762452.html
- http://www.kunlunpai.cn/thread-1211-1-1.html%5Bதொடர்பிழந்த+இணைப்பு%5D
- http://3g.nuoha.net/www/book/157471/00037.html
- "CITY IN WEST CHINA TO GET PIPED WATER; American 'Sells' Warlord at Sining on System to Aid Health --People Suspect Clear Fluid". THE NEW YORK TIMES. 3 February 1947. https://www.nytimes.com/1947/02/03/archives/city-in-west-china-to-get-piped-water-american-sells-warlord-at.html. பார்த்த நாள்: 2010-11-28.
- HENRY R. LIEBERMAN (15 September 1948). "ENLIGHTENED RULE BOLSTERS TSINGHAI; General Ma, War Lord, Enjoys Passion for Education -- He Taxes as Need Arises". The New York Times. https://www.nytimes.com/1948/09/15/archives/enlightened-rule-bolsters-tsinghai-general-ma-war-lord-enjoys.html. பார்த்த நாள்: 2010-11-28.
- Greg Rohlf (2003-10-01). "Dreams of Oil and Fertile Fields". Mcx.sagepub.com. பார்த்த நாள் 2014-02-07.