சித்திரதுர்க்கா மாவட்டம்
சித்திரதுர்க்கா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சித்திரதுர்க்கா நகரத்தில் உள்ளது. இம்மாவட்டம் தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும், தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும், மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும், கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தாவண்கரே மாவட்டமும் முன்னர் இம்மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. புராணக் கதைகளான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
சித்திரதுர்க்கா மாவட்டம் ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆ | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
பகுதி | பெங்களூர் |
தலைநகரம் | சித்ரதுர்கா |
வட்டம் | சித்திரதுர்க்கா, ஹிரியூர், ஹொசதுர்கா, மொளகால்மூரு, சள்ளகேரே, ஹொளல்கெரே |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 8,440 |
மக்கள்தொகை (2001)[1] | |
• மொத்தம் | 15,17,896 |
• அடர்த்தி | 180 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
தொலைபேசிக் குறியீடு | + 91 (8194) |
வாகனப் பதிவு | KA-16 |
பால் விகிதம் | 1.047 ஆண்கள்/பெண் |
கல்வியறிவு | 64.5% |
இணையதளம் | chitradurga.nic.in |
2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,517,896 ஆகும்.
ஆட்சிப் பிரிவுகள்
- வட்டங்கள்:[2]
- சட்டமன்றத் தொகுதிகள்:[2]
- மொளகால்மூர்
- சள்ளகெரே
- சித்ரதுர்கா
- ஹிரியூர்
- ஹொசதுர்கா
- ஹொளல்கெரே
- மக்களவைத் தொகுதிகள்:[2]
இவற்றையும் பார்க்கவும்
- கர்நாடக மாவட்டங்கள்
- பெங்களூரு கோட்டம்
மேற்கோள்கள்
- "District at a Glance". Chitradurga district website. பார்த்த நாள் 3 January 2011.
- மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.