சித்தி ஜுனைதா பேகம்

சித்தி ஜுனைதா பேகம் (ஆச்சிமா 1917 - மார்ச் 19, 1998). நாகூர், இந்தியா. இவர் முதல் தமிழ் முஸ்லிம் புரட்சிப் பெண் எழுத்தாளர். 81 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர்.

சித்தி ஜுனைதா பேகம்
பிறப்பு1917
நாகூர், இந்தியா
இறப்பு19.03.1998
மற்ற பெயர்கள்ஆச்சிமா
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இஸ்லாம்
பெற்றோர்எம். ஷரீப் பெய்க்
முத்துகனி
வாழ்க்கைத்
துணை
ஏ. பகீர் மாலிமார்
பிள்ளைகள்சித்தி ஜபீரா (பொன்னாச்சிமா),
சித்தி ஹமீதா(அம்மா),
சித்தி மஹ்மூதா(சித்திமா),
சித்தி சாதுனா

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் தனது 12வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். நான்கைந்து ஆண்டுகளே நீடித்த அந்தத் திருமண வாழ்க்கையில் நான்கு குழந்தைகளுக்குத் தாயானார். பதினேழாவது வயதிற்குள்ளேயே விதவையானார்.

எழுத்துலக வாழ்வு

சித்தி ஜுனைதா பேகம் மூன்றாம் வகுப்பு வரையே கற்றிருந்தார். இவர் தாருல் இஸ்லாம் என்ற இதழைப் படித்துத்தான் செந்தமிழைக் கற்றுக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது பதினாறாவது வயதில் எழுதவும் தொடங்கினார். பிற்காலத்தில் நிறையச் சிறுகதைகளும், பெருங்கதைகளும் எழுதினார். இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ல் தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது. தாருல் இஸ்லாம் வாசகியான இவர் தனது முதல் சிறுகதையை முஸ்லிம் பெண்களின் உரிமைக்குப் போராடிய தாவூத் ஷாவுக்கு அனுப்பி வைத்தார். ஒரு பெண் எழுதிய சிறுகதை என்றதும், தாவூத் ஷாவுக்கு ஆச்சரியம். ஆனந்தம். முஸ்லிம் பெண்கள் கூடக் கதை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்று பெருமிதத்துடன் சிரித்தார். அந்தக் கதையை தாருல் இஸ்லாம் இதழில் உடனே வெளியிட ஏற்பாடு செய்தார்.

குடும்பப் பின்னணி

சித்தி ஜுனைதா பேகம் எம். ஷரீப் பெய்க், முத்துகனி தம்பதிகளின் மூத்த புதல்வி. இவருக்கு நான்கு சகோதரர்கள். இவரது மூத்த சகோதரர் சிறந்த பேச்சாளரும் பலமொழிகள் அறிந்த அறிஞருமான ஹூசைன் முனவ்வர் பெய்க். இரண்டாவது சகோதரர் காரைக்காலில் பால்யன் என்ற பத்திரிகையை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திய முஜீன் பெய்க். மற்றைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டனர். இவரது தாத்தா தென் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்த மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர்.

வெளிவந்த நூல்கள்

  • காதலா கடமையா - நாவல் (1938)
  • செண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல் - நாவல் (1947)
  • மகிழம்பூ -நாவல்
  • இஸ்லாமும் பெண்களும் - கட்டுரைத் தொகுப்பு (1995)
  • மலைநாட்டு மன்னன் - தொடர்கதை
  • ஹலிமா அல்லது கற்பின் மாண்பு
  • பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை
  • திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு - வாழ்க்கை வரலாறு (1946)
  • காஜா ஹஸன் பசரீ (ரஹ்) - முஸ்லிம் பெருமக்கள் வரலாறு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.