சாலிவாகன ஆண்டு

சாலிவாகன ஆண்டு அல்லது சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும். இந்து நாட்காட்டி, இந்தியத் தேசிய நாட்காட்டி, கம்போடிய பௌத்த நாட்காட்டி என்பன இம் முறையையே கைக்கொள்ளுகின்றன. கௌதமிபுத்திர சதகர்ணி என்றும் அழைக்கப்படுகின்ற சாலிவாகனன் என்னும் சாதவாகன மன்னனே அவன் உஜ்ஜயினியின் விக்கிரமாதித்தனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.

மேற்கு சத்ரபதிகள் நாட்டு மன்னர் ருத்திரசேனரின் உருவம் பொறித்த வெள்ளி நாணயம், (ஆண்டு கி பி 202-222); நாணயத்திற்கு பின்புறம் பிராமி எழுத்தில் சக ஆண்டு 131 என பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜாவாவின் அரசவையில், பழைய ஜாவானியக் காலம் தொட்டு 1633 ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்தது. பின்னர் ஜாவானிய இசுலாமியக் கலப்பு முறையான அன்னோ ஜவானிக்கோ என்னும் முறையின் அறிமுகத்துடன் இது வழக்கொழிந்தது.

பண்டைய கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்ட ஆண்டு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.[1]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.