சாயிஷா

சாயிஷா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.[1][2] தெலுங்கு படமான அகில் (2015) படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் (2016) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.[3][4] பிறகு வனமகன் (2017) படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சாயிஷா
இந்தோரில் சிவாய் படத்தின் முன்னோட்ட அறிமுக விழாவில் சாயிஷா.
பிறப்பு12 ஆகத்து 1997 (1997-08-12)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2015-தற்பொழுது வரை
வாழ்க்கைத்
துணை
ஆர்யா (தி. 2019)

சொந்த வாழ்க்கை

நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர். இவர் நடிகர்களான சைரா பானு [5] மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் .[6] 13 பிப்ரவரி 2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார்.[7] இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.[8][9]

தொழில்

தெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.[10] அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார்.[11][12][13] 2018 இல், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது காப்பான் என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். .

திரைப்பட வரலாறு

குறிப்பு
இன்னும் வெளியிடப்படாத படங்கள் குறிப்பிடுகின்றன
ஆண்டு தலைப்பு பங்கு மொழி குறிப்புக்கள்
2015 அகில் திவ்யா தெலுங்கு தெலுங்கு படம்
2016 சிவாய் அனுஷ்கா இந்தி இந்தி ஹிந்தி படம்
2017 வனமகன் காவியா தமிழ் அறிமுகமான தமிழ் படம்
2018 கடைக்குட்டி சிங்கம் இனியா
2018 ஜுங்கா யாழினி
2018 கஜினிகாந்த் வந்தனா
2019 காப்பான்அஞ்சலி
2019 யுவரத்தினா TBA கன்னடம் கன்னடம் திரைப்படம்; படப்பிடிப்பு

குறிப்புகள்

  1. "About Sayyeshaa" (en). மூல முகவரியிலிருந்து 12 April 2017 அன்று பரணிடப்பட்டது.
  2. "I Didn't Get This Film For My Family Connections". mumbaimirror.indiatimes.com. பார்த்த நாள் 14 June 2018.
  3. "Sayyeshaa goes on learning spree with Ajay Devgn starrer Shivaay" (30 May 2016). மூல முகவரியிலிருந்து 12 June 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 June 2018.
  4. "Ajay Devgn’s discovery Sayyeshaa is turning heads - Times of India". மூல முகவரியிலிருந்து 27 May 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 June 2016.
  5. "SHIVAAY’ ACTRESS SAYYESHAA IS THE GRAND NIECE OF SAIRA BANU". filmydost.in. பார்த்த நாள் 9 July 2018.
  6. "Saira Banu's grand niece Sayyeshaa Saigal All Set For Telugu Debut". www.news18.com. பார்த்த நாள் 11 February 2015.
  7. "சாயிஷா ஆர்யா திருமண அறிவிப்பு". பார்த்த நாள் 9 மார்ச் 2019.
  8. Shruti Shiksha (9 மார்ச் 2019). "Inside Actors Sayyeshaa Saigal And Arya's Pre-Wedding Festivities With Sanjay Dutt And Other Stars". என்டிடிவி. பார்த்த நாள் 9 மார்ச் 2019.
  9. "Arya and Sayyeshaa wedding bash inside pics and videos: Shivaay actress sets the dance floor on fire". India today (9 மார்ச் 2019). பார்த்த நாள் 9 மார்ச் 2019.
  10. "Sayyeshaa to debut in Ajay Devgn’s Shivay" (24 October 2014). மூல முகவரியிலிருந்து 19 November 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 November 2015.
  11. "Sayyeshaa upbeat about Vanamagan" (in en). www.deccanchronicle.com/. 2017-06-18. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/180617/sayyeshaa-upbeat-about-vanamagan.html.
  12. "Vanamagan release postponed due to Kollywood strike" (in en-US). Top 10 Cinema. 2017-05-10. Archived from the original on 21 August 2017. https://www.top10cinema.com/article/42463/vanamagan-release-postponed-due-to-kollywood-strike.
  13. "Vanamagan Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers - Filmibeat". மூல முகவரியிலிருந்து 24 June 2017 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.