சாகுல் ஹமீது

சாகுல் ஹமீது (Shahul Hameed, இறப்பு: 1998) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவரது பாடல்கள் பெரும்பாலும் ஏ. ஆர். ரகுமான் இசைத்த தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளன. 1980களில் சாகுல் ஹமீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி வந்தார். 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்தென்றல் மற்றும் சில நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் 1989ல் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து தீன் இசை மழை என்ற இஸ்லாமிய இசைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்றார்.

சாகுல் ஹமீது
இயற்பெயர்சாகுல் ஹமிது
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்1989-1998

தமிழ் பாடல்கள்

வருடம்பாடல்திரைப்படம்/ ஆல்பம்உடன் பாடியவர்கள்
1989"எல்லாப் புகழும் இறைவனுக்கே"தேன் இசை மழை
"எங்கள் அப்துல்"
"நாகூர் சாகுல் அமீத்"
"நாகூர் நகரலும் தூயா"
1993"உசிலம்பட்டி பெண்குட்டி"ஜென்டில்மேன்சுவர்ணலதா
"மாரி மழை பெய்யாதோ"உழவன்ஜி. வி. பிரகாஷ் குமார் சுஜாதா மோகன்
"ராசாத்தி என் உசுரு"திருடா திருடா
1994"செந்தமிழ் நாட்டு தமிழச்சியே"வண்டிச்சோலை சின்ராசு
"ஈச்சம் பழம்"பவித்ராசித்ரா
"மெட்ராசை சுத்திப் பாக்க போறேன்"மே மாதம்சுவர்ணலதா, ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மனோரமா
"எதுக்கு பொண்டாட்டி"கிழக்குச் சீமையிலேகலா, சுனந்தா
"பச்சை கிளி பாடும்"கருத்தம்மாமின்மிணி
"ஊர்வசி ஊர்வசி"காதலன்ஏ. ஆர். ரகுமான், சுரேஷ் பீட்டர்ஸ்
"பேட்டை ராப்"காதலன்சுரேஷ் பீட்டர்ஸ், Theni Kunjarammal
1996"முத்து முத்து"கிழக்கு முகம்சுஜாதா மோகன்
1998"வாராயோ தோழி"ஜீன்ஸ்சோனு நிகம், ஹரிணி, சங்கீதா கிரிஷ் (நடிகை)

இறப்பு

1998ல் சென்னைக்கு அருகே நடந்த ஒரு வாகன விபத்தில் சாகுல் ஹமீது இயற்கை எய்தினார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.