சம்போ

சம்போ இரசியாவின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.[1][2] சம்போ என்பதன் அர்த்தம் ஆயுதமின்றி தற்பாதுகாப்பு என்பதாகும். 1920 களில் சோவியத் செஞ்சேனையினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது யுடோ போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக சோவியத் ஒன்றிய விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

சம்போ
Sambo
Cамбо
நோக்கம்நெருக்கிப்பிடித்தல், முழு தாக்குதல், கலப்பு சண்டைக் கலை
தோன்றிய நாடு உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு
பெயர் பெற்றவர்கள்விளாதிமிர் பூட்டின்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
Official websitewww.sambo.com

முறைகள்

சம்போ மூன்றுவித முறைகளைக் கொண்டது.

  • விளையாட்டு சம்போ
  • போராட்ட சம்போ
  • திறந்த முறை சம்போ

மேற்கோள்கள்

மூலங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.