சம்புவரையர்
சம்புவரையர்கள் வட தமிழ்நாட்டை ஆண்ட சிற்றரச மரபினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் இடைக்கால மற்றும் பிற்கால சோழர் அரசாங்கத்தின் கீழ் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். சோழர்களின் அழிவுக்குப்பின் வடதமிழ்நாட்டின் சில பகுதிகளை ஆண்டிருக்கின்றனர். அதில் தற்போது தமிழக மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் அடங்கும்.
சம்புவரைய அரசு | |||||
| |||||
தலைநகரம் | படைவீடு[1], விருஞ்சிபுரம் | ||||
மொழி(கள்) | தமிழ் | ||||
சமயம் | இந்து | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
அதிபர் | |||||
- | கி.பி. 1236 - 1268 | ராஜ கம்பீரர் | |||
- | கி.பி. 1322 - 1337 | மண்கொண்டார் | |||
- | கி.பி. 1337 - 1373 | ராஜ நாராயணர் | |||
- | கி.பி. 1356 - 1375 | ராஜ நாராயணர் III | |||
வரலாற்றுக் காலம் | இடைக்காலம் | ||||
- | உருவாக்கம் | 12 ஆம் நூற்றாண்டு | |||
- | சம்புவரையர் எழுச்சி | ||||
- | குலைவு | 1375 | |||
Warning: Value specified for "continent" does not comply |
மதுரா விஜயம்
மதுரா விஜயம் என்னும் நூலில் விஜயநகரப் பேரரசு மன்னனான முதலாவது புக்கா ராயன் என்பவன் தன் மகனான கம்பன்னனிடம் ”நீ சம்புவரையரை பணியவைத்தால் மதுரையிலுள்ள இசுலாமிய மன்னர்களையும் பணிய வைத்து விடலாம்” என்று கூறுவதிலிருந்து, பதினான்காம் நூற்றாண்டில் சம்புவரையர் செல்வாக்கை அறியலாம்.
சங்ககால எதிரிகள்
சம்புவரையர் குலம் வல் வில் ஓரி என்ற சங்ககால குறுநில மன்னனின் வம்சத்தின் வழி வந்ததாக கருதப்படுகிறது. இந்த ஓரி மன்னன் காரி என்னும் மன்னனால் கொல்லப்பட்டான். மலையமான் மன்னர்கள் இக்காரி மன்னனின் வம்சத்தில் வந்தவர்கள். இதனால் சம்புவரைய மன்னர்களுக்கும், இம்மலையமான் குடும்பத்திற்கும் உட்புகைச்சல் இருந்தது.