சத்தியாசிரயன்

சத்தியாசிரயன் (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். இவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். சத்தியாசிரயன் சோழர் , பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தான். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். [1] இவனது தந்தை இரண்டாம் தைலப்பன் ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். [2] சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரண்ண என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.[3][4][5] இவன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான். [6]

மேற்கோள்

  1. Kamath (1980). p.101
  2. Sastri(1955), p.164
  3. Narasimhacharya (1988), p.18
  4. Sastri (1955), p.356
  5. Kamath (1980) p.101

குறிப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.