சதாம் தீவுகள்

சதாம் தீவுகள் (Chatham Islands) பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து] பெருநிலப்பரப்பில் இருந்து 680 கிமீ தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது 40கிமீ சுற்றுவட்டத்தில் கிட்டத்தட்ட 10 தீவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் சதாம் தீவு மிகப் பெரியதாகும். அதற்கடுத்த பெரிய தீவு பிட் தீவு ஆகும்.

சதாம் தீவுகள்
Chatham Islands
உள்ளூர் பெயர்: எர்க்கோகு, வாரிக்காவுரி
சதாம் தீவுகளைக் காட்டும் நிலவுருவப் படம்
புவியியல்
அமைவிடம்தெற்கு பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்44°02′S 176°26′W
தீவுக்கூட்டம்சதாம் தீவுகள்
மொத்தத் தீவுகள்10
முக்கிய தீவுகள்சதாம் தீவு, பிட் தீவு
பரப்பளவு966 km2 (373 sq mi)
உயர்ந்த ஏற்றம்294
உயர்ந்த புள்ளிமௌங்கடேர் குன்று
நிர்வாகம்
நியூசிலாந்து
பெரிய குடியிருப்புவைத்தாங்கி
மக்கள்
மக்கள்தொகை650
விண்ணில் இருந்து தெரியும் சதாம் தீவுகள். மிகப்பெரிய தீவு சதாம் தீவு, பிட் தீவு இரண்டாவது பெரியது, அதற்கு வலப்பக்கமாக உள்ளது தென்கிழக்குத் தீவு, மிகச் சிறியது.

உள்ளூர் மொரியோரி மொழியில் இத்தீவுக்கூட்டம் "ரெக்கோகு" (Rekohu, தெளிவற்ற சூரியன்) எனவும், மாவோரி மொழியில் "வரெக்கோரி" (Wharekauri) எனவும் அழைக்கப்படுகிறது. இது 1842 ஆம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக நியூசிலாந்தின் ஒரு பகுதியாக உள்ளது.

புவியியல்

இத்தீவுகள் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் இருந்து கிட்டத்தட்ட 800 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இவற்றின் மொத்தப் பரப்பளவு 966 சதுர கி.மீட்டர்கள்கள் (373 சதுர மைல்) ஆகும்.

இத் தீவுகள் சிலவற்றில் வேளாண்மை செய்வதற்காக ஒரு தடவை காடுகள் அழிக்கப்பட்டன. இவை இப்போது சதாம் தீவுகளுக்குத் தனித்துவமான தாவர, விலங்கினங்களைக் காப்பதற்கான காப்பகங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

சதாம் தீவுகளின் நேரம்

புதிய நாள் தொடங்குவதாகக் கருதப்படும் பன்னாட்டு நாள் கோடு சதாம் தீவுகளுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. ஆனாலும் இத்தீவுகள் 180° நிலநிரைக்கோட்டுக்குக் கிழக்கில் அமைந்துள்ளது. இதனால் சதாம் தீவின் நேரம் (பகலஒளி சேமிப்பு நேரம் உட்பட நியூசிலாந்து நேரத்தை விட 45 நிமிடங்கள் முந்தியது ஆகும்.

சூழ்நிலையியலும் உயிரியல் பல்வகைமையும்

தீவின் பெரும்பகுதி பன்னங்களினாலும், மேய்ச்சல் புல்வெளிகளினாலும் மூடப்பட்டுள்ளது. சில காட்டுப் பகுதிகளும் உள்ளன. காற்றின் எதிர்த்திசையில் கிடைமட்டமாகக் கிளைகளைக் கொண்ட "மாக்குரோகார்ப்பா" என்னும் மரங்கள் குறிப்பிடத்தக்கவை. தீவுகள் பெரும்பாலும் மலைப் பாங்கானவை. பிட் தீவு, சதாம் தீவிலும் கூடிய மலைப்பாங்கானது. மிகவும் உயர்ந்த பகுதி (299 மீட்டர்) முதன்மைத்தீவின் தென் முனைக்கு அண்மையில் அமைந்துள்ளது. ரெக்கோஹு கூட்டத்தைச் சேர்ந்த முதன்மைத் தீவு, பல ஏரிகளையும், குடாக்களையும் கொண்டு அமைந்துள்ளது. தே வாங்கா குடா இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சதாமில் உள்ள ஏனைய ஏரிகளுள் ஹூரோ, ரங்கித்தாகி என்பன அடங்கும். ரேக்கோகுவில் தே அவைனங்கா, தூக்கு (Tuku) போன்ற சிற்றாறுகளும் உள்ளன.

இத் தீவுகள் இடத்துக்குரிய பறவைகள் பலவற்றின் இருப்பிடமாக உள்ளன. இவற்றுள் மஜென்டா பெட்ரல் (Magenta Petrel), கரும் ராபின் என்பவை குறிப்பிடத்தக்கவை. இவ்விரு இனங்களும் முன்னர் அழியும் நிலையில் இருந்து பின்னர் காப்பு நடவடிக்கைகள் மூலம் அழியாமல் காப்பாற்றப்பட்டவை.

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.