சதாசிவம் விசாரணை ஆணையம்

சதாசிவம் விசாரணை ஆணையம் (Sadasivam Commission) தமிழ்நாட்டில், சத்தியமங்கலம், மேட்டூர், தாளவாடி, மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் முகாமிட்டு சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்தால் நீதிபதி சதாசிவம் தலைமையில் அமைக்கப்பட்ட ஓர் ஆணையம் ஆகும்.

பின்னணி

கடந்த 1993ம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடிப்பிடிப்பதற்காக அமைக்கப்பட்டத் தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படைகளின் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கின. இந்த நடவடிக்கைகளின் போது அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களைக் கற்பழிப்பு, சித்திரவதை, கடத்தல் மற்றும் கொலை செய்துள்ளதாக அதிரடிப்படையினரின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அக்குற்றங்கள் குறித்து இந்த ஆணையம் இரு மாநிலங்களிலும் விசாரணை நடத்தியது. 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை 2003 இல் சமர்ப்பிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. அதிரடிப்படையின் கொடுமைகள்: டெல்லியில் மலைவாழ் பெண்கள் முறையீடு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.