சஞ்சனா கல்ரானி
அர்ச்சனா கல்ரானி (பிறப்பு: அக்டோபர் 10, 1989) அல்லது திரைப்படங்களில் சஞ்சனா கல்ரானி ,[1] இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஒரு காதல் செய்வீர் (2006) திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். கன்ட கென்டதி என்ற கன்னடத் திரைப்படத்தின் வாயிலாக கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். பூரி ஜெகன்நாத் இயக்கிய புஜ்ஜிகடு தெலுங்குத் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார்.[2][3]
சஞ்சனா கல்ரானி | |
---|---|
![]() 60ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சஞ்சனா | |
பிறப்பு | அர்ச்சனா கல்ரானி 10 அக்டோபர் 1989 பெங்களூரு, கர்நாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சஞ்சனா |
பணி | திரைப்பட நடிகை, |
செயல்பட்ட ஆண்டுகள் | 2005–தற்போதும் |
பெற்றோர் | மனோகர் கல்ரானி, ரேஷ்மா |
உறவினர்கள் | நிக்கி கல்ரானி (சகோதரி) |
வாழ்க்கைக் குறிப்பு
ஆரம்பகால வாழ்க்கை
சிந்தி சமூகத்தைச் சார்ந்த சஞ்சனா பெங்களூருவில் வளர்ந்தார்.[4] டார்லிங், யாகாவாராயினும் நா காக்க, கோ 2 திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ரானி, இவரது சகோதரியாவார். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார். தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பகுதி நேரமாக பயன்படுத்திக் கொண்டு படிப்பினை தொடர்ந்தார்.[5] இவர் சுமார் 60க்கும் அதிகமான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றியுள்ளார். இவற்றுள் ஜான் ஆபிரகாம் உடன் நடித்த பாஸ்ட் டிராக் விளம்பரபடம் அமைந்தது.[4]
திரை வாழ்க்கை
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | இதர குறிப்புகள் |
---|---|---|---|---|
2005 | மொகுடு பெல்லம் ஓ பாய் பிரண்ட் | தெலுங்கு | ||
2006 | பந்து ரங்கா விட்டாலே | கன்னடம் | பெயரிடப்படாத சிறிய கதாபாத்திரம் | |
2006 | ஒரு காதல் செய்வீர் | சுபா ஆனந்த் | தமிழ் | |
2006 | கன்ட கென்டதி | சஞ்சனா | கன்னடம் | |
2007 | ஆட்டோகிராப் பிளீஸ் | கன்னடம் | ||
2008 | அர்ஜுன் | கன்னடம் | ||
2008 | புஜ்ஜிகடு | கங்கனா | தெலுங்கு | |
2009 | சத்யமேவ ஜெயதே | சுஞ்சனா | தெலுங்கு | |
2009 | மஸ்த் மஜா மாடி | சஞ்சனா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் |
2009 | சமர்துடு | தெலுங்கு | ||
2010 | போலிஸ் போலிஸ் | சுந்தியா | தெலுங்கு | |
2010 | ஹுடுகா ஹுடுகி | சஞ்சனா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் |
2010 | மைலரி | கன்னடம் | ||
2011 | ஏ சஞ்சே | சுனு | கன்னடம் | |
2011 | ரங்கப்பா ஹாக்பிட்னா | சினேகா | கன்னடம் | |
2011 | துஸ்ஸனா | சுஞ்சனா | தெலுங்கு | |
2011 | ஐ'யம் சாரி மத்தே பன்னி பிரீத்சனா | சிஞ்சனா | கன்னடம் | |
2011 | டேக் இட் ஈசி | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2011 | முக்குரு | யாமினி | தெலுங்கு | |
2012 | கோ கோ | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2012 | கசானொவா | நிதி | மலையாளம் | |
2012 | தெ கிங் அன்ட் தெ கமிசனர் | நிதா ரத்தோர் | மலையாளம் | |
2012 | நரசிம்மா | ராணி | கன்னடம் | |
2014 | லவ் யூ பங்காராம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் [6] | |
2014 | அக்ரஜா | கன்னடம் | ||
2015 | ரேபெல் | லைலா | கன்னடம் | |
2015 | ராம் லீலா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2015 | சிவ கேசவ் | தெலுங்கு | பின் தயாரிப்பு | |
2015 | ஒன்ஸ் அபான் யெ டைம் | தெலுங்கு | பின் தயாரிப்பு[7] | |
2015 | சாரதா | தெலுங்கு | படப்பிடிப்பில் | |
2015 | பெங்களூர் 23 | கன்னடம் | படப்பிடிப்பில்[8] | |
2015 | மண்டியா டூ மும்பை | கன்னடம் | படப்பிடிப்பில்[9] | |
2015 | பதரல் முனீர் கஸ்னல் ஜமால் | மலையாளம் | படப்பிடிப்பில்[10] | |
2015 | அவுனு 2 | தெலுங்கு | ||
2015 | சினிமா மை டார்லிங் | தேவயானி | கன்னடம் | |
பெற்ற விருதுகள்
- சிறந்த எதிர்மறை நாயகி - பெங்களூர் டைம்ஸ் விருதுகள் (மாதே பன்னி பிரீத்சனா திரைப்படத்திற்காக).[11]
மேற்கோள்கள்
- "Happy Birthday Sanjjanaa". பார்த்த நாள் 10 October 2015.
- "Sanjana hopes to make a mark - The Times of India". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2008-08-21/news-interviews/27949572_1_sanjana-kannada-film-samardhudu.
- "Sanjana on a roll - The Times of India". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2008-06-28/news-interviews/27781673_1_sanjana-kannada-film-satyameva-jayathe.
- Sanjana Interview - Oneindia Entertainment
- "Sanjjanaa’s wait continues". Deccan Chronicle (2014-01-18). பார்த்த நாள் 2014-06-05.
- "Sanjjanaa returns to Mollywood - The Times of India". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2013-05-01/news-and-interviews/38957095_1_sanjjanaa-malayalam-version-sanjjanna.
- "Sanjjanaa enjoying 'spicy' song shoot for Bangalore 23 - The Times of India". Timesofindia.indiatimes.com (2014-05-07). பார்த்த நாள் 2014-06-05.
- "Sanjjana in `Life In a Metro`". Sify.com (2014-02-28). பார்த்த நாள் 2014-06-05.
- http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Sanjjannaa-back-in-Mollywood-/articleshow/35481074.cms
- "The Bangalore Times Film Awards 2011". The Times Of India. 21 June 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-06-21/news-interviews/32336976_1_ramya-kiccha-sudeep-kannada-film-industry.