கோவணம்

கோவணம் என்பது இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடையாகும். பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை உள்ளாடையாக அணிகிறார்கள். கோவணத் துணி என்று தனியாக கடைகளில் விற்கப்படுவதில்லை. துண்டுகளோ பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகளோ கோவணங்களாகப் பயன்படுகின்றன. கோவணத்தை இடையில் இறுக்கிக் கட்ட அரைஞாண் கயிறு உதவுகிறது.

கோவணத்தின் பயன்பாடு

தற்போது உள்ள இளைய தலைமுறையில் கோவணம் அணியும் போக்கு மிகவும் குறைந்து வருகிறது. கடும் வெயில், வயலில் வேலை செய்வோர் வெறும் கோவணத்துடன் வேலை செய்வதுண்டு. எனினும், பொது அவையில் வெறும் கோவணத்துடன் தோன்றுவது கண்ணியமானதாகக் கருதப்படுவதில்லை. உள்ளாடையாக கோவணம் அணிவது தற்காலத்தில் நாகரிகமாகவும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை, பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். முற்காலங்களில் ஆண்கள் 1 அல்லது 2 துண்டுகள் வைத்திருப்பாற்கள். குளிக்கும்போது, கோவணத்துடன் குளித்து, பின் ஆடை மாற்றும்போது உலர்ந்த கோவணம் ஒன்றை தரிப்பர். இது வயது வித்தியாமின்றி, சிறியவர் முதல் பெரியவர், முதியவர் என அனைவரும் அணிவர். சிறிய ஆண் பிள்ளைகளுக்கு வீட்டில் உலாவும்போது வேறு ஆடைகள் இன்றி கோவணம் மட்டுமே அணிந்து விடுவர். சிலர் பருவமடையா பெண் குழந்தைகளுக்கு கூட கட்டிவிடுவதுண்டு. சில சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவது குறிப்பிடத்தக்கது. பட்டிணத்தார் அதில் குறிப்பிடத்தக்கவர்.முருகக் கடவுளும் ஆண்டியாக இருந்த போது கோவணம் அணிந்திருந்ததாக சித்தரிக்கப்படுவதுண்டு.கோவணம் கட்டுவதால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஹிரணியா எனப்படும் விரைவீக்கத்தை தவிர்க்கலாம்.

கோவணம் கட்டுதல்

5 அல்லது 6 அங்குல அகல துணிஎடுத்து, அரைஞாண் கயிற்றில் ஒரு அந்தத்தை சொருகி பின், துணியினல் ஆண்குறியையும் விதையையும் சேர்த்து சுற்றி கவட்டினூடாக பின்னே எடுத்து, கயிற்றின் பின் புறத்தில் சொருகப்படும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.