கோலாலம்பூர் கால்பந்துச் சங்கம்
கோலாலம்பூர் காற்பந்துச் சங்கம் (Kuala Lumpur Football Association, மலாய்: 'பெர்சாத்துயன் போலா செபக் கோலாலம்பூர்'), மலேசிய கூட்டாட்சிப் பகுதியான கோலாலம்பூரில் காற்பந்துச் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் காற்பந்துச் சங்கமாகும்.
![]() | |||
முழுப்பெயர் | கோலாலம்பூர் கால்பந்துச் சங்கம் பெர்சாத்துயன் போலா செபக் கோலாலம்பூர் | ||
---|---|---|---|
அடைமொழி | நகர அணி நகரப் பசங்க Boys பருந்துகள் | ||
தோற்றம் | கூட்டாட்சிப் பகுதி காற்பந்து சங்கமாக 1974இல் | ||
ஆட்டக்களம் | செலாயங் விளையாட்டரங்கம் | ||
கொள்ளளவு | 25,000 | ||
அவைத்தலைவர் | அத்னான் மொகமது அக்சன் | ||
பயிற்சியாளர் | இசுமாயில் சக்காரியா | ||
கூட்டமைப்பு | மலேசியா பிரீமியர் லீக் | ||
2015 | மலேசிய பிரீமியர் லீக், 11வது | ||
|
கோலாலம்பூர் காற்பந்துச் சங்கம் 1974இல் கோ ஆ சாய் மற்றும் கே. இராசலிங்கத்தால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் இது கூட்டாட்சிப் பகுதி காற்பந்துச் சங்கம் எனப்பட்டது. 1979இலிருந்து மலேசிய காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்று வரும் இச்சங்கம் 1986இல் தற்போதுள்ள பெயருக்கு மாறியது.
1980களில் அச்சங்கம் சாதனைகளை நிகழ்த்தியது; 1986இலும் 1988இலும் லீக் வெற்றியாளராக விளங்கியது. 1987, 1988,1989 எனத் தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் மலேசியக் கோப்பையை வென்றனர். 1990களிலும் கோப்பை போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியது. 1993, 1994, 1999இல் மலேசிய கோப்பையை வென்றது. மலேசிய அறக்கட்டளை கேடயத்தையும் சுல்தான் ஆஜி அகமது ஷா கோப்பையையும் 1988, 1995, 2000ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளது.
இந்தச் சங்கத்திற்கும் செலாங்கூர் காற்பந்துச் சங்கத்திற்கும் கடுமையான போட்டி நிலவுகின்றது. இவை இரண்டுக்கும் இடையேயான போட்டிகள் கிளாங் பள்ளத்தாக்கு டெர்பி என்றழைக்கப்படுகின்றன. 2012இல் கோலாலம்பூர் கூட்டிணைவுப் போட்டிகளில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது; 2013இல் தனது வரலாற்றில் முதன்முறையாக மேலும் தாழ்ந்து மூன்றாம் நிலைக்கு வந்துள்ளது.