சீருடை (சங்கக் காற்பந்து)

சங்கக் காற்பந்தில், மற்ற விளையாட்டுக்களைப் போலவே, சீருடை என்பது விளையாட்டாளர்கள் அணிகின்ற சீர்தர உடைகளையும் உபகரணங்களையும் குறிக்கும். இதனை ஆங்கிலத்தில் கிட் ("kit"), இசுட்ரிப் ("strip") எனக் குறிப்பிடுகின்றனர். காற்பந்தாட்டச் சட்டங்கள் ஓர் விளையாட்டாளர் அணிந்திருக்க வேண்டிய குறைந்த பட்ச உடைகளைக் குறிப்பிடுகிறது. மேலும் விளையாட்டாளருக்கும் பிற பங்கேற்பாளருக்கும் எவ்வித ஆபத்தும் விளைவிக்கக் கூடிய எதனையும் தரிப்பதை தடை செய்கிறது. காற்பந்துப் போட்டி நடத்தும் அமைப்புக்கள் இவற்றைத் தவிர கூடுதலாக சட்டைகளில் காட்சிப்படுத்தப்படும் வணிகச் சின்னங்கள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றை வரையறுக்கலாம். மேலும் ஆட்டத்தில் இறங்கும் இரு அணிகளின் சீருடை வண்ணங்களும் ஒன்றாக அல்லது ஒத்து இருந்தால் வெளியூரிலிருந்து வந்து ஆடும் அணி வேறு வண்ண உடைகளை அணிவது கட்டாயமாகும்.

2006இல் பவல் நெத்வெட் தற்கால காற்பந்து சீருடையை அணிந்துள்ளார்

காற்பந்து வீரர்கள் பொதுவாக தங்கள் சட்டையின் பின்புறத்தில் தங்களை அடையாளப்படுத்தும் எண்களை அணிவது வழக்கமாக உள்ளது. துவக்கத்தில் அணி உறுப்பினர்கள் 1 முதல் 11 வரையான, கிட்டத்தட்ட தங்களின் விளையாடும் இடத்தைப் பொறுத்து, எண்களை மட்டுமே அணிந்து வந்தனர். இது பின்னர் ஒரு குழுவின் அங்கத்தினர்களுக்கு ஓர் பருவம் முழுமையும் ஒரே எண் வழங்கப்படும் முறைக்கு மாறியது. தொழில்முறை கழகங்கள் தங்கள் விளையாட்டாளரின் சட்டையில் அவரது பெயரை (அல்லது செல்லப் பெயரை) எண்ணிற்கு மேலாக (மிகச் சிறிய நேரங்களில் கீழாக) காட்சிப்படுத்துகின்றனர்.

ஆரம்ப காலங்களிலிருந்து காற்பந்து சீருடைகள் மிகவும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. தடித்த பருத்திச் சட்டைகள், முழங்கால் காற்சராய்கள், கனமான, நெகிழ்வில்லாத, தோல் மூடுகாலணிகளையும் பயன்படுத்திய காலகட்டத்திலிருந்து உடைத் தொழில்நுட்ப மற்றும் அச்சிடல் மேம்படுத்தல்களால் மெல்லிய செயற்கை இழைகளாலான வண்ணமிகு சட்டைகள், உடலியக்கத்திற்கு தடை செய்யாத வடிவமைப்புகள், குறைவான நீளம் கொண்ட காற்சட்டைகள், இலகுவான மிருதுவான காலணிகள் என இருபதாம் நூற்றாண்டில் முன்னேறியுள்ளது. 20ஆம் நூற்றாண்டில் விளம்பர முறைமைத் தழுவலால் புரவலர்களின் வணிகச் சின்னங்கள் சட்டைகளில் தோன்றத் துவங்கின. தொழில்முறைக் கழகங்கள் விளையாட்டு வீரர்களின் உடைகளின் நகல்களை இரசிகர்களுக்கு விற்று குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்ட முடிந்தது.

சீருடை உபகரணங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.