கோர்தோபா, அர்கெந்தீனா

கோர்தோபா (Córdoba, எசுப்பானிய ஒலிப்பு: [ˈkorðoβa]) அர்கெந்தீனாவின் புவியியல் மையத்தில் அமைந்துள்ள நகரமாகும். சியேராசு சிகாசு மலையடிவாரத்தில் சுக்குய்யா ஆற்றங்கரையில் புவெனஸ் ஐரிஸ் நகரிலிருந்து வடமேற்கில் 700 கிமீ (435 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது கோர்தோபா மாகாணத்தின் தலைநகரமாகவும் அர்கெந்தீனாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 1,330,023 ஆகும்.

கோர்தோபா
நகரம்
சியுடாடு டெ கோரதோபா
நாசியோனசு பூங்காவிலிருந்து எடுக்கப்பட்ட நகரக் காட்சி, சான் மார்ட்டின் சதுக்கம், லா கனடா கிளென், கோர்தோபா தேசியப் பல்கலைக்கழகத்தின் அர்கெந்தீனா காட்சியரங்கு, நுயேவா கோர்தோபா புறநகரிலிருந்து எடுக்கப்பட்ட இரவு நகரக்காட்சி, கோர்தோபா வளைவு, இயேசு அவை வளாகத்தை 2000இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கும் நினைவுச்சின்னம், எவிட்டா நுண்கலை அருங்காட்சியகம்.

சின்னம்
கோர்தோபா
ஆள்கூறுகள்: 31°25′S 64°11′W
நாடு அர்கெந்தீனா
மாகாணம் கோர்தோபா
மாவட்டம் (டிபார்ட்மென்ட்)தலைநகர மாவட்டம்
நிறுவப்பட்டது1573
Named forகோர்தோபா, எசுப்பானியா
அரசு
  நகரத்தந்தைரேமன் யாவியர் மெஸ்த்ரே (UCR)
பரப்பளவு
  நிலம்576
ஏற்றம்352.86
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
  அடர்த்தி2,273.5
  நகர்ப்புறம்13,17,298
  பெருநகர்15,28,000
 [1]
நேர வலயம்அர்கெந்தீனா நேரம் (ஒசநே−3)
1573இல் கோர்தோபாவை நிறுவிய ஒரோனிமோ லூயி டெ கபேராவின் நினைவுச்சின்னம்.

இதனை 1573ஆம் ஆண்டு சூலை 6ஆம் நாள் ஒரோனிமோ லூயி டெ கபேரா நிறுவினார்; அவர் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபாவை ஒட்டி இதற்கு அதே பெயரை இட்டார். அர்கெந்தீனா என இன்று அறியப்படும் பகுதியில் (அக்காலகட்டத்தில் இப்பகுதி சான்டியேகோ டெல் எஸ்டெரோ என அழைக்கப்பட்டது) அமைந்த முதல் எசுப்பானிய குடியேற்றத் தலைநகரங்களில் ஒன்றாக இது இருந்தது. இங்குள்ள கோர்தோபா தேசிய பல்கலைக்கழகமே நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்; எசுப்பானிய அமெரிக்காவின் ஏழாவதாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகமுமாகும். இதனை இயேசு சபையினர் 1613இல் நிறுவினர். இப்பல்கலைகழக இருப்பால் கோர்தோபா லா டாக்டா (அண்மித்த தமிழாக்கம், "அறிவார்ந்த ஒன்று") என அழைக்கப்பட்டது.

கோர்தோபாவில் பல எசுப்பானிய குடியேற்ற ஆட்சிக்கால வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை கட்டிடங்களைக் காணலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இயேசு சபை வளாகம் (எசுப்பானியம்: மன்சானா எசூட்டிகா), 2000 இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[2] இந்த வளாகத்திலுள்ள கட்டிடங்கள் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவற்றில் மொன்செராட் தேசியக் கல்லூரி, குடியேற்ற பல்கலைக்கழக வளாகம் ஆகியவையும் அடங்கும். இந்த பல்கலைக்கழக வளாகம் தற்போது கோர்தோபா தேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று அருங்காட்சியகமாக உள்ளது. கோர்தோபா பல்கலைக்கழகம் 20ஆம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து நாட்டின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமாக (முதலாவது புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகம்) விளங்குகின்றது.

மேற்கோள்கள்

  1. "INDEC: estimaciones de población" (PDF). மூல முகவரியிலிருந்து 9 April 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-04-22.
  2. UNESCO World Heritage Centre (2000-11-30). "UNESCO". Whc.unesco.org. பார்த்த நாள் 2014-04-22.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.