கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)
கோட்டை அருங்காட்சியகம் தமிழகத்தின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள ஓர் கட்டடம் ஆகும். கி.பி. 1795 இல் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் கி. பி. 1948 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் கிடைத்த பழம்பொருட்கள், பலவகைப் பீரங்கிகள், ஆயுதங்கள், ஆங்கிலேயரும் பிற சில ஐரோப்பியரும் வெளியிட்ட நாணயங்கள்,பணயமாக பிடித்து வைக்கப்பட்ட திப்பு சுல்தானின் குழந்தைகளுடன் காரன்வாலிஸ் உள்ள பெரிய பளிங்குச் சிலை [1], இங்கிலாந்து நாட்டின் அரசர்கள், அரசிகள், புனித ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றிய ஆளுநர்கள், ஆர்க்காட்டு நவாபுகள் ஆகியோரது பெரிய கண்கவர் உருவ ஓவியங்கள், இராபர்ட் கிளைவ் எழுதிய கடிதங்கள், பிரெஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய விளக்குகள், பீங்கான் பாத்திரங்கள், பிரெஞ்சுத் தலைவர்களின் படங்கள், மைசூரை ஆட்சி புரிந்த உடையார்களின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பம், சித்திரம் முதலியவை காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.[2]
மேற்கோள்களும் குறிப்புகளும்
- http://asi.nic.in/asi_museums_chennai.asp
- வி. கந்தசாமி (2011-மூன்றாம் பதிப்பு). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். பக். 32,33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8379-008-6.