கொங்கணி வர்மன்

கொங்கணி வர்மன் என்பவர் கங்க வம்சத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார். இவர் அரசராக முடி சூட்டிக்கொண்டது சகம் 101 பிரமோதூத வருடம் (கி. பி. 179) எனவும், போருக்குச் செல்லும் போது தன்னுடைய வாளினாலே ஒரு கல்லை வெட்டித் துண்டித்து இக்கல் துண்டானதுபோல் பகையரசர்களை துண்டம் பண்ணுவேன் என்று சபதம் செய்து அப்படியே செய்தான் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி.[1]

அரசை நிறுவுதல்

கி.பி.நான்காம் நூற்றாண்டின் மத்தியில் கர்நாடகப் பகுதியில் இச்சுவாகு மரபின் இளவரசர்களான திட்டிகன் என்னும் கொங்கணிவர்மன் மாதவன் என்ற இருவரால் சிம்மநந்தி என்னும் சமண ஆச்சாரியார் ஆசியுடனும் உதவியுடனும் கங்கமரபு அரசு நிறுவப்பட்டது.

ஸ்கந்தபுரம்

கதையின்படி கங்கநாட்டை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் போலவே இவனும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், பல தேச மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், அறியமுடிகிறது.[2]

சிறப்புப் பெயர்

கங்கை குலத்திலே பிறந்த கொங்கணி வர்மன் சிறந்த அரசாட்சி நடத்தியதால் ஸ்ரீமது, தர்ம மகாதிராயன் என பட்டங்கள் பெற்றான் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி.[1]

விரிவாக்கம்

கங்க அரசை நிறுவிய காலத்தில் தற்கால கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை ஆண்டுவந்த பாணர்களைக் கொங்கணிவர்மன் வென்றான்.[3]

மேற்கோள்

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-98-99)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. இரா.இராமகிருட்டிணன்,தகடூர் வரலாறும் பண்பாடும் பக்.165
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.