கேவியட் மனு

கேவியட் மனு அல்லது முன்னெச்சரிக்கை மனு (Caveat Petition) என்பது தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட காரியத்தில், பிரதிவாதிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவானது கேவியட் மனு எனப்படும்.[1]

கேவியட் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிற்கு முன் எச்சரிக்கை என்று பொருள்.[2][3] முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்தவரின் கருத்தை அறிந்த பின்பே, வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்.

நீதிமன்றத்தில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், தன்னை அல்லது நிறுவனத்தை கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பு கூறக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வர். கேவியட் மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்றுத்தான் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்குவதால், தனி மனித அல்லது நிறுவனத்தின் உரிமை காக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக அகில இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும், தங்களது (தமிழ்நாடு அரசு) கருத்தை கேட்காமல், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி கேவியட் மனுவை 26 மே 2016 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.[4][5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.