கே. ஏ. அப்பாசு

கே. ஏ. அப்பாசு (குவாசா அகமது அப்பாசு 7 சூன் 1914–1 சூன் 1987) திரைப்படக் கதை உரையாடல்களை எழுதுபவராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இதழிகையாளராகவும் விளங்கியவர். உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படைப்புகள் படைத்தவர். நயா சனகர் என்னும் திரைப்பட நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அவர் எழுதி இயக்கிய திரைப் படங்கள் தேசிய விருதுகளையும் உலக விருதுகளையும் பெற்றன. சில இந்திப் படங்களையும் தயாரித்து வெளியிட்டார். இவருடைய சிறு கதைகளும் புதினங்களும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. 70 புத்தகங்களை எழுதியுள்ளார். 'பிளிட்சு' என்னும் ஆங்கில இதழில் கடைசிப் பக்கத்தில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.

குவாசா அகமது அப்பாசு / கே. ஏ. அப்பாசு
பிறப்புகுவாசா அகமது அப்பாசு
7 June 1914 (1914-06-07)
பானிபட், ஹரியானா, பிரித்தானிய இந்தியா
இறப்பு1 June 1987 (1987-07) (aged 72)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படக் கதை-உரையாடலாசிரியர், எழுத்தாளர், இதழிகையாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1935–1987

பிறப்பும் கல்வியும்

அரியானாவில் பானிபட் என்னும் ஊரில் கல்வி கேள்விகளில் சிறந்த குடும்பத்தில் பிறந்தார். பானிபட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். மெட்ரிகுலேசன் படிப்புக்குப் பின் அலிகர் முசுலிம் பல்கலைக் கழகத்தில் கற்று ஆங்கில இலக்கியத்திலும் சட்டப் படிப்பிலும் பட்டம் பெற்றார்.

இதழிகைப் பணி

படிப்பு முடிந்ததும் பாம்பே குரோனிக்கில் என்னும் பத்திரிக்கையில் சேர்ந்து எழுதத் தொடங்கினார்.பிளிட்சு என்னும் இதழில் கடைசிப் பக்கத்தில் கட்டுரைகள் தொடர்ந்து எழுதினார். தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை பிளிட்சில் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிர்ரர் என்னும் இதழிலும் எழுதினார். உலகத் தலைவர்கள் ரூசுவேல்ட் , குருசேவ் , மோ சே துங் போன்றோரைச் சந்தித்து உரையாடி இதழ்களில் எழுதினார்.

விருதுகள்

சோவியத்து யூனியனின் 'வோரோங்கி' விருது (1984)

காலிப் விருது (1983)

உருது அகாதமி விருது (1984)

பத்ம சிறீ விருது (1969)

மேற்கோள்

http://www.deccanherald.com/content/247175/F

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.