கெர்ஃகாத் சுரோடர்

கெர்ஃகாத் பிரிட்சு குர்த் சுரோடர் (Gerhard Fritz Kurt Schröder) (பி:7 ஏப்ரல் 1944) 1998ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை செருமனியின் சான்சுலர் அல்லது வேந்தராக பொறுப்பேற்றிருந்த ஓர் செருமானிய அரசியல்வாதி ஆவார். சோசலிச மக்களாட்சிக் கட்சியைச் சேரந்த இவர் பசுமைகள் எனப்படும் கட்சியினருடன் கூட்டணி அமைத்து அரசு அமைத்தார்.அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்கறிஞராக இருந்தார்.1990-1998ஆம் ஆண்டுகளில் கீழ் சக்சனிக்கு பிரமராக பணியாற்றினார்.2005ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சியின் தோல்வியை அடுத்து மூன்று வாரங்கள் கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்றமையால் எதிர்கட்சியான கிருத்துவ மக்களாட்சி சங்கத்தின் ஏங்கலா மெர்கலுக்கு வேந்தராக பதவியேற்க வழிவிட்டார்.தற்போது உருசியாவிலிருந்து செருமனிக்கு தரையடி எரிவாயு குழாய் அமைக்கும் நார்ட் இசுட்ரீம் நிறுவனத்தின் வணிகவாரியத் தலைவராக உள்ளார்.

கெர்ஃகாத் சுரோடர்
செருமனியின் சான்சுலர்
பதவியில்
27 அக்டோபர் 1998  22 நவம்பர் 2005
குடியரசுத் தலைவர் ரோமன் ஹெர்சோக்
யோன்னசு ராவ்
ஹோர்சு கோலர்
துணை யோசுகா பிஷர்
முன்னவர் எல்மெட் கோல்
பின்வந்தவர் ஏங்கலா மெர்கல்
செருமன் சோசலிச மக்களாட்சிக் கட்சியின் அவைத்தலைவர்
பதவியில்
12 மார்ச்சு 1999  21 மார்ச்சு 2004
முன்னவர் ஓசுகர் லாபோன்டைன்
பின்வந்தவர் பிரான்சு முன்டெஃபெர்ரிங்
கீழ் சக்சனியின் பிரதமர்
பதவியில்
21 சூன் 1990  27 அக்டோபர் 1998
முன்னவர் எர்னசுட் அல்பிரெக்ட்
பின்வந்தவர் கெர்காத் குளோகௌசுகி
செருமனி சட்ட மேலவைத் தலைவர்
(President of the German Bundesrat)
பதவியில்
1997–1998
முன்னவர் எர்வின் டௌஃபெல்
பின்வந்தவர் ஹான் ஐசேல்
தனிநபர் தகவல்
பிறப்பு 7 ஏப்ரல் 1944 (1944-04-07)
மோசன்பெர்க்-வோரென், செருமனி
அரசியல் கட்சி சோசலிச மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஈவா சுபாக் (1968–1972)
ஆன் டாசுமேகர் (1972–1984)
இல்துருட் அம்பல் (1984–1997)
டோரிசு சுரோடர்-கோஃப் (1997–நடப்பு)
படித்த கல்வி நிறுவனங்கள் கோட்டிங்கென் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்
சமயம் செருமனியின் இவாலாஞ்சிகல் சர்ச்[1]
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. http://www.bundestag.de/bundestag/abgeordnete/bio/S/schroge0.html

வெளியிணைப்புகள்

    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    Gerhard Schröder
    என்பதின் ஊடகங்கள் உள்ளன.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.