அங்கெலா மேர்க்கெல்
அங்கெலா டொரோதெயா மேர்கெல் (Angela Dorothea Merkel) (பிறப்பு சூலை 17, 1954) என்பவர் ஜெர்மானிய அரசியல்வாதியும் 2005 முதல் ஜெர்மனியின் வேந்தராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் 2001 முதல் 2018 வரை கிறிஸ்துவ மக்களாட்சி ஒன்றியக் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பில் உள்ள தலைவராகவும் உலகின் வலிமைமிக்க பெண்ணாகவும் கருதப்படுகிறார்.
அங்கெலா மேர்க்கெல் | |
---|---|
![]() | |
ஜெர்மனியின் வேந்தர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 22 நவம்பர் 2005 | |
குடியரசுத் தலைவர் | ஃபிராங்க்-வால்டர் ஸ்டியன்மெயர் |
துணை வேந்தர் | ஒலாஃப் ஸ்கோல்ஸ் |
முன்னவர் | கெர்ராட் ஸ்கோர்டர் |
கிறிஸ்துவ மக்களாட்சி ஒன்றியத்தின் தலைவர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2000 – 7 டிசம்பர் 2018 | |
பொதுச்செயலாளர் | அன்னெகிரட் கிராம்ப்-கர்ரென்பொவர் |
துணை | தாமஸ் ஸ்ரோபில் |
முன்னவர் | Wolfgang Schäuble |
பின்வந்தவர் | Annegret Kramp-Karrenbauer |
CDU/CSU குழுவின் தலைவர் | |
பதவியில் 22 September 2002 – 21 November 2005 | |
துணை | Michael Glos |
முன்னவர் | Friedrich Merz |
பின்வந்தவர் | Volker Kauder |
கிறிஸ்துவ மக்களாட்சி ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் | |
பதவியில் 7 நவம்பர் 1998 – 10 ஏப்ரல் 2000 | |
தலைவர் | Wolfgang Schäuble |
முன்னவர் | Peter Hintze |
பின்வந்தவர் | Ruprecht Polenz |
சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்புத் துறை அமைச்சர் | |
பதவியில் 17 நவம்பர் 1994 – 26 நவம்பர் 1998 | |
வேந்தர் | Helmut Kohl |
முன்னவர் | Klaus Töpfer |
பின்வந்தவர் | Jürgen Trittin |
பெண்கள் மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சர் | |
பதவியில் 18 January 1991 – 17 November 1994 | |
வேந்தர் | Helmut Kohl |
முன்னவர் | Ursula Lehr |
பின்வந்தவர் | Claudia Nolte |
ஜெர்மானியக் கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 22 செப்டம்பர் 2013 | |
தொகுதி | Vorpommern-Rügen – Vorpommern-Greifswald I |
பதவியில் 18 சனவரி 1991 – 22 செப்டம்பர் 2013 | |
தொகுதி | Stralsund – Nordvorpommern – Rügen |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அங்கெலா டொரோதெயா 17 சூலை 1954 ஆம்பர்க், மேற்கு ஜெர்மனி |
அரசியல் கட்சி |
|
வாழ்க்கை துணைவர்(கள்) | Ulrich Merkel (தி. 1977–1982) Joachim Sauer (தி. 1998–தற்காலம்) |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
கையொப்பம் | ![]() |
இவர் கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் சார்பாக 2005 இடாய்ச்சுலாந்து கூட்டமைப்பு தேர்தல்களில் ஜெர்மனியின் வேந்தர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும் தேர்தல் முடிவுகள் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை தராத நிலையில், ஜெர்மன் சமூகக் குடியரசுக் கட்சியுடன் மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்த அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், மேர்க்கெலை ஜெர்மனியின் அடுத்த வேந்தராக பதவியேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மேர்க்கெல் ஜெர்மனியின் முதல் பெண் வேந்தராகவும் ஜெர்மனி தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணாகவும் ஆகிறார்.அவருடைய செல்லிடத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக்கேட்டதாகக் கூறப்படுகிறது.[2] நான்காவது முறையாக இடாய்ச்சுலாந்தின் வேந்தராக அங்கெலா மேர்க்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]
இளமைப்பருவ வாழ்க்கையும் கல்வியும்
மேர்க்கெல், டெம்ப்லின் என்னும் இடத்திலும் லைப்ஃசிக் பல்கலைக்கழகத்திலும் படித்தார். 1973 முதல் 1978 வரை இயற்பியல் படித்தார். பின்னர் 1978 முதல் 1990 வரை இடாய்ச்சுலாந்தின் இயற்பியல் வேதியியலுக்கான நடுவகத்தில் (Zentralinstitut für physikalische Chemie (ZIPC)) மேர்க்கெல் வேதியியல் (இயற்பியல் வேதியியல்) படிப்பையும் பணியையும் தொடர்ந்தார். உருசிய மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டு குவாண்டம் வேதியியல் தலைப்பில் முனைவர் பட்டம் (Dr. rer. nat.) பெற்றார்[4].
மேற்கோள்களும் உசாத்துணைகளும்
- "Angela Merkel: Her bio in brief". Christian Science Monitor. 2013-09-20. https://www.csmonitor.com/World/Europe/2013/0920/Angela-Merkel-her-bio-in-brief.
- "ஜெர்மன் தலைவர் ஏங்கலா மெர்க்கல் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது". பிபிசி (24 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.
- "ஜெர்மனி : 4-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்கல்; முதல்முறையாக வலதுசாரி கட்சி வெற்றி". பிபிசி (25 செப்டம்பர் 2017). பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.
- Merkel, Angela (1986) (in German). Untersuchung des Mechanismus von Zerfallsreaktionen mit einfachem Bindungsbruch und Berechnung ihrer Geschwindigkeitskonstanten auf der Grundlage quantenchemischer und statistischer Methoden (Investigation of the mechanism of decay reactions with single bond breaking and calculation of their velocity constants on the basis of quantum chemical and statistical methods). Berlin: Academy of Sciences of the German Democratic Republic (dissertation). cited in Langguth, Gerd (August 2005) (in German). Angela Merkel. Munich: DTV. பக். 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-423-24495-2., மேலும் இது இடாய்ச்சுலாந்தின் நாட்டகநூலகத்தில், குறியெண் 30 (வேதியியல்)இன் கீழ், பதிவுப்பட்டியலில் உள்ளது