கூடங்குளம்
கூடங்குளம் தமிழ்நாடு மாநிலம் , திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர்.[4] இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப் பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
கூடங்குளம் | |
அமைவிடம் | 8°11′34″N 77°42′20″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 24 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இக்கிராமம் கன்னியாக்குமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு சுப. உதயகுமாரன் தலைமையில் இடிந்தகரையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போகு கேரளத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "Radhapuram Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. பார்த்த நாள் 7 சூன் 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.