குவானிடின்

குவானிடின் (Guanidine) என்பது காரத்தன்மை கொண்ட படிகப் பொருளாகும். மரபிழையாகிய டி.என்.ஏ, ஆர்.என்.ஏவில் உள்ள நியூக்ளிக் காடிகளில் உள்ள நான்கு அடிக்கூறுகளில் ஒன்றான குவனைன் (Guanine) ஆக்சிசனேற்றமடைவதன் மூலம் இது கிடைக்கும். இது நெகிழிப்பொருள்கள் (பிளாஸ்டிக்) மற்றும் வெடிமருந்து படைப்பதிலும் பயன்படுகிறது. மனித உடலில் புரத வளர்சிதைமாற்றத்தால் உண்டாகும் இது மனிதச் சிறுநீரில் வழக்கமாகக் காணப்படுகிறது.

குவானிடின்
Guanidine
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Guanidine
இனங்காட்டிகள்
113-00-8 N
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
CH5N3
வாய்ப்பாட்டு எடை 59.07 g/mol
உருகுநிலை
காரத்தன்மை எண் (pKb) 1.5
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் Guanidinium chloride
Nitroguanidine
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

குவானிடிய நேர்ம மின்னணு (நேர் அயனி)

இயல்பான உடலியங்கல் சூழல் குவானிடியம் நேர்மின்னி (புரோட்டான்) ஏற்றம் அடைந்து, குவானிடிய நேர்ம மின்னணுவாக (நேர் அயனியாகக்) [CH6N3]+ என்பதாகக் காணப்படும். இது +1 மின்தன்மையுடையது. இதன் காடி எண் அல்லது காடி மின்பிரிவாகும் எண், pKa, மதிப்பு 12.5.

குவானிடிய வழிப்பெறுதிகள்

குவானிடிய வழிப்பெறுதிகள் (R1R2N)(R3R4N)C=N-R5 எனும் பொது வாய்பாடை உடையவை. இவற்றில் உள்ள முக்கியப் பிணைப்பு இமைன் தொகுதி ஆகும். இயற்கையில் காணப்படும் இருபதுஅமினோ அமிலங்களுள் ஒன்றான அர்ஜினைன் ஒரு குவானிடிய வழிப்பெறுதியே ஆகும். குவானிடிய உப்புகள் புரதங்களை இயல்பிழக்கச் செய்யும் (denaturation) தன்மை ஊடையவை. குவானிடியம் குளோரைடு இவற்றுள் மிகப் பயனுடையது.

மாற்று எரிபொருள்

தற்பொழுது குவானிடின் மாற்று எரிபொருளாகக் (alternate fuel) கருதப்படுகிறது. வினையூக்கியின் முன்னிலையில் ஒரு மூலக்கூறு தனிக்கார குவானிடின் இரு மூலக்கூறு நீருடன் இணைந்து மூன்று மூலக்கூறு அம்மோனியா மற்றும் ஒரு மூலக்கூறு கார்பன் டை ஆக்சைடைத் தருகிறது. இந்த அம்மோனியா அகஎரி இயந்திரங்களில் நேரடி எரிபொருளாகவோ அல்லது நைதரசன் மற்றும் ஹைதரசனாகச் சிதைவடையச் செய்தோ எரிபொருள் கலங்களில் (fuel cells) பயன்படுத்தப்படலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.