குற்றம் கடிதல்

குற்றம் கடிதல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜே. சதீசுக் குமாரும் கிறிஸ்டி சிலுவப்பனும் தயாரிக்க, ஜி.பிரம்மா இயக்கியுள்ளார். இதில் சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா, சாய் இராஜ்குமார், பவல் நவகீதன் நடித்துள்ளனர்.

குற்றம் கடிதல்
இயக்கம்பிரம்மா.ஜி
தயாரிப்புஜெ.சதீஷ் குமார், கிறிஸ்டி சிலுவப்பன்
இசைசங்கர் ரெங்கராஜன்
நடிப்புசிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா
ஒளிப்பதிவுமணிகண்டன் D.F.Tech
படத்தொகுப்புசி. எஸ். பிரேம்
வெளியீடு2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்தில் வெவ்வேறு வாழ்க்கைத்தரங்களில் வாழும் மனிதர்கள் குறித்தும் ஓர் எதிர்பாராத நிகழ்வு இவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் மையப்படுத்தியுள்ளது. நாடகப்பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் தலைப்பு, ‘குற்றம் கடிதல்’ திருக்குறளின் 44ஆவது அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது; இந்த அதிகாரத்தில் திருவள்ளுவர் குற்றமிழைப்பதை தவிர்க்க வலியுறுத்துகின்றார்.

2014ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரைப்படத்திற்கான சிறந்த திரைப்படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

திரைப்பட விழாக்கள்

மார்ச் 24, 2015இல் இத்திரைப்படத்திற்கு 62ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

16ஆவது மும்பை திரைப்பட விழாவில் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் திரைப்படங்களுடன் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘இந்தியத் திரைப்படங்களின் புதிய முகங்கள்’ பகுப்பில் இவை வேறு நான்கு திரைப்படங்களுடன் போட்டியிடுகின்றன.

16ஆவது சிம்பாப்வே பன்னாட்டுத் திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே தமிழ் திரைப்படமாக குற்றம் கடிதல் விளங்குகின்றது.[2]

நவம்பர் 20, 2014 முதல் நவம்பர் 30, 2014 வரை நடந்த கோவாத் திரைப்படவிழாவில் இந்தியப் பனோரமாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்படமாகவும் இது இருந்தது. 12ஆவது சென்னைத் திரைப்படவிழாவில் கடைசி நாளன்று முன்னோட்டமாக வெளியிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்படம் என்ற விருது கிடைத்தது.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.