குரு அரவிந்தன்

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார்.

குரு அரவிந்தன்
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்கனடா
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.

எழுத்துத் துறையில்

இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த விகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரது தொடர்கட்டுரைகள் வெளிவருகின்றன.

இலங்கையில் தினக்குரல், வீரகேசரி, செருமனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.

இணையத்தில்

இணையத்தில் "பதிவுகள்", "திண்ணை" போன்ற இணையத்தளங்களில் நாடகம், படைப்பிலக்கியம் சம்பந்தமான விமர்சனக் கட்டுரைகளை எழுதி வருகின்றார்.

சிறுகதைத் தொகுப்புக்கள்

  • இதுதான் பாசம் என்பதா? (2002, 2005)
  • என் காதலி ஒரு கண்ணகி (2001)
  • நின்னையே நிழல் என்று! (2006)

நாவல்கள்

  • உறங்குமோ காதல் நெஞ்சம்? (2002,2004)
  • உன்னருகே நான் இருந்தால்...? (2004)
  • எங்கே அந்த வெண்ணிலா? (2006)
  • நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (2008)

ஒலிப்புத்தகங்கள்

  • மலரே காதல் மலரே...
  • நதியே காதல் நதியே..
  • இங்கேயும் ஒரு வெண்ணிலா

மேடை நாடகங்கள்

தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர்களின் கலைவிழாவுக்காக இவர் நாடகங்களை எழுதியுள்ளார்.

திரைக்கதை

கனடாவில் பல திரைப்படங்களுக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்..

மேடையேறிய நாடகங்கள்

  • அன்னைக்கொருவடிவம், (சித்தங்கேணி ஒன்றிய ஆண்டுவிழா)
  • மனசுக்குள் மனசு. (மாகஜனக்கல்லூரி நூற்றான்டு விழா – கதை வசனம்)

மேடையேறிய சிறுவர் நாடகங்கள்

  • பொங்கலோ பொங்கல், (சொப்கா பீல் தமிழர் மன்றம்)
  • தமிழா தமிழா, (வாட்டலூ தமிழ் சங்கம்)
  • பேராசை (பீல் கல்விச்சபை பல்கலாச்சார விழா)

இலக்கிய பரிசுகள்

  • யுகமாயினி குறு நாவல் போட்டி (2009) - இரண்டாம் பரிசு
  • கலைமகள் - ராமரத்தினம் நினைவு குறுநாவல் போட்டி (2011)- இரண்டாம் பரிசு

விருதுகள்

  • தமிழர் தகவல் இலக்கிய விருது - (கனடா, 2012)

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.