கிறிஸ்டோபர் ரென்

சர் கிறிஸ்டோபர் ரென் (Sir Christopher Wren, அக்டோபர் 20, 1632பெப்ரவரி 25, 1723) வரலாற்றில் மிக மிகவும் பாராட்டப்பட்ட ஓர் ஆங்கிலேயக் கட்டிடக்கலை நிபுணர். லண்டன் மாநகரில் 1666 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் தீயை அடுத்து 51 கிறித்தவத் தேவாலயங்களை மீளக் கட்டினார். லுட்கேட் ஹில் என்ற இடத்தில் புனித பவுல் தேவாலயத்தை 1710 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

சர் கிறிஸ்டோபர் maikkal ரென்
Sir Christopher Michael Wren F.R.S.
பிறப்புஅக்டோபர் 20, 1632(1632-10-20)
வில்ட்ஷயர், இங்கிலாந்து
இறப்பு25 பெப்ரவரி 1723(1723-02-25) (அகவை 90)
லண்டன்
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
துறைகட்டிடக்கலை, இயற்பியல், வானியல், கணிதம்
கல்வி கற்ற இடங்கள்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

ரென் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலத்தீன் மற்றும் இயற்பியல் பயின்றார். மேலும் ரென் ஒரு குறிப்பிடத்தக்க வானியல், கணித-இயற்பியலாளரும் ஆவார். ரென் ராயல் சொசைட்டியை நிறுவினார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.