கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ்

கிறித்தோபர் ஜான்சன் மக்கென்ட்லசு (Christopher Johnson McCandless, 12 பெப்ரவரி 1968 - ஆகத்து 1992) அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு சாகசக்காரர் ஆவார். எளிய வாழ்க்கை வாழ்வதற்காக 1992ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அலாஸ்காவிலுள்ள காட்டுப்பகுதிக்குத் தனியே சென்றார். நான்கு மாதங்களுக்குப் பிறகு அவருடைய உடல் டெனாலி தேசியப் பூங்காவில் சுஷனா ஆற்றின் கிழக்குக் கரையில் கண்டெடுக்கப்பட்டது.

Christopher McCandless
கிறிஸ்டோபர் மக்கென்ட்லஸ்
பிறப்புபெப்ரவரி 12, 1968(1968-02-12)
எல் செகுண்டோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஆகத்து 1992 (அகவை 24)
அலாஸ்கா, அமெரிக்கா
Body discoveredசெப்டம்பர் 6, 1992
மற்ற பெயர்கள்
  • கிறிஸ் மக்கென்ட்லஸ்
  • அலெக்சான்டர் சூப்பர்ட்ராம்ப்
படித்த கல்வி நிறுவனங்கள்எமரி பல்கலைக்கழகம்

மக்கென்ட்லஸ் பற்றிய ஒரு முழு நீள கட்டுரை தி நியூயார்க்கர் பத்திரிகையில் பிப்ரவரி 8, 1993 இதழில் வெளியானது.[1] மக்கென்ட்லஸின் பயணத்தைப் பற்றிய கதையை 1996ல், ஜான் கிராகொயர் எனும் மலையேற்ற சாகசக்காரர் Into the Wild (இன் டு த வைல்ட் / காட்டுக்குள்) என்ற பெயரில் வெளியிட்டார். மக்கென்ட்லஸின் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட Into the Wild (இன் டு த வைல்ட் / காட்டுக்குள்) என்ற ஆங்கிலத் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.