கிருஷ்ணாநகர்
கிருஷ்ணாநகர் (Krishnanagar) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது நதியா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரில் ஜலாங்கி ஆறு ஓடுகிறது. இந்நகராட்சியானது 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விவசாயம் இங்கு முக்கியத் தொழிலாகும். இந்நகராட்சி 16 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.
கிருஷ்ணாநகர் কৃষ্ণনগর | |
---|---|
நகரம் | |
![]() கிருஷ்ணாநகர் அரண்மனையின் வெளித் தோற்றம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | நதியா மாவட்டம் |
ஏற்றம் | 14 |
மக்கள்தொகை (2001) | |
• நகரம் | 13,041 |
• பெருநகர் | 1,81,182 |
Languages | |
• Official | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
இணையதளம் | nadia.nic.in |

அமைவிடம்
இந்நகரின் அமைவிடம்23.4°N 88.5°E ஆகும்.[1] இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 14 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,81,182 ஆகும்.[2] ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் என்ற அளவில் உள்ளது.[2] மொத்த மக்கட்தொகையில் 6 வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் 7.5% ஆகும்.[2] இந்நகர மக்களின் கல்வியறிவு 88.09% ஆகும்.[2] ஆண்களின் கல்வியறிவு 90.84% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 85.29% ஆகவும் உள்ளது.[2]