கிருஷ்ண பக்தி

கிருஷ்ண பக்தி 1949-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கிருஷ்ண பக்தி
இயக்கம்ஆர். எஸ். மணி
தயாரிப்புலேனா செட்டியார்
கதைஆர். எஸ். மணி
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
நடிப்புபி. யு. சின்னப்பா
கே. ஆர். ராமசாமி
என். எஸ். கிருஷ்ணன்
சிதம்பரம் ஜெயராமன்
டி. பாலசுப்பிரமணியம்
டி. ஆர். ராஜகுமாரி
டி. ஏ. மதுரம்
பி. ஏ. பெரியநாயகி
எம். எல். வசந்தகுமாரி
பாடலாசிரியர்உடுமலை நாராயணகவி
ஒளிப்பதிவுஜித்தன்
கலையகம்நியூடோன்
விநியோகம்கிருஷ்ணா பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 14, 1949
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உடுமலை நாராயணகவி எழுதிய பாடல்களை பி. யு. சின்னப்பா, எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோர் பாடியுள்ளனர். லேனா என அழைக்கப்பட்ட எஸ். எம். லட்சுமணன் செட்டியார் இப்படத்தைத் தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் கதையை ஆர். எஸ். மணி எழுதியிருந்தார்.[1] எஸ். டி. எஸ். யோகி, சுத்தானந்த பாரதியார், கு. ப. சேது அம்மாள், சாண்டில்யன்ஆகியோரின் வசனங்கள் கதையில் இணைக்கப்பட்டன.[1] எம். எல். வசந்தகுமாரி இப்படத்தில் மட்டுமே பாடி நடித்திருந்தார்.[2]

திரைக்கதை

பரம பாகவத சிரோன்மணி என்ற வெளிவேடமிட்டு ஊரை ஏமாற்றும் வஞ்சகன் ஒருவன், ராஜசிம்மன் எனும் மன்னனிடம் ராஜகுருவாக (பி. யு. சின்னப்பா) இருக்கிறான். அவனது போலிப் பக்தியை உண்மை என நம்பி, அவனது வஞ்சக வலையில் வீழ்ந்து விடுகிறாள் தேவகுமாரி (டி. ஆர். ராஜகுமாரி) என்ற அழகிய தேவதாசி. தன்னைக் குருவாகக் கருதி வந்த தேவகுமாரியை, ராஜகுரு மானபங்கம் செய்ய முயற்சிக்கும்போது, அவனது மனச்சாட்சி அவனது பரம விரோதியாக உருவெடுத்து அவன் தவறை விளக்கி, உபதேசம் செய்கிறது. திருந்திய ராஜகுரு தேவகுமாரியைத் தன் குருவாக எண்ணி, ஓர் உண்மை பக்தனாக மாறுகிறான்.[1]

நடிகர்கள்

இன்னும் பலர்.[1]

பாடல்கள்

இப்படத்திற்கான பாடல்களை உடுமலை நாராயணகவி இயற்றியுள்ளார்.[1] எஸ். வி. வெங்கட்ராமன், குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. "கிருஷ்ண பக்தி - ஒரு போதனைப் படம்". பேசும் படம்: பக். 130-132. சனவரி 1949.
  2. ராண்டார் கை (15 பிப்ரவரி 2008). "Krishna Bhakthi 1948". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/krishna-bhakthi-1948/article3022555.ece. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.