கிரிசு ரொக்

கிரித்தபர் யூலியசு கிரிசு ரொக் III ஒரு அமெரிக்க நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர். இவரது மேடைச்சிருப்புரைக்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசியல், வர்க்கம், இனம், உறவுகள் ஆகியவற்றை இவரது கருப்பொருட்களாக பெரிதும் பயன்படுத்துகிறார்.

Chris Rock
கிரிஸ் ராக்

2004இல் கிரிசு ராக்.
இயற்பெயர் கிரிஸ்தஃபர் ஜூலியஸ் ராக் III
பிறப்பு பெப்ரவரி 7, 1965 (1965-02-07)
ஆன்ட்ரூஸ், தென் கரொலைனா, அமெரிக்கா
Medium மேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம்
தேசியம் அமெரிக்கர்
நடிப்புக் காலம் 1985 - இன்று
நகைச்சுவை வகை(கள்) Satire/Political satire,
Observational comedy,
Black humor,
Musical comedy
தலைப்பு(கள்) இனப் பாகுபாடு, இனங்களின் உறவு, நடப்பு நிகழ்வுகள், அமெரிக்க அரசியல், ஆபிரிக்க அமெரிக்கப் பண்பாடு, பரவலப் பண்பாடு, மனிதர் பாலியல், திருமணம்
செல்வாக்கு செலுத்தியோர் ரிச்சர்ட் பிரயர், பில் காஸ்பி, எடி மர்ஃபி, வுடி ஏலென், ஸ்டீவ் மார்ட்டின், டிக் கிரெகரி, ஃபிலிப் வில்சன், பிக்மீட் மார்க்கம்,[1] சாம் கினிசன், ஜோர்ஜ் கார்லின், மோர்ட் சால்[2]
செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டோர் டேவ் சப்பெல்,[2] ஜோர்ஜ் லோப்பெஸ்,[3] கிரிஸ்டியன் ஃபினிகன்,[4]
வாழ்க்கைத் துணை மலாக் காம்ப்டன் (நவம்பர் 23, 1996 - இன்று) (2 குழந்தைகள்)
இணையத்தளம் www.chrisrock.com
எமி விருதுகள்
Outstanding Writing for a Variety or Music Program
1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன்
1999 த கிரிஸ் ராக் ஷோ
Outstanding Variety, Music or Comedy Special
1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன்
கிராமி விருதுகள்
Best Spoken Comedy Album
1998 ரோல் வித் த நியூ
2000 பிகர் & பிளாக்கர்
Best Comedy Album
2006 நெவர் ஸ்கேர்ட்
அமெரிக்க நகைச்சுவை விருதுகள்
Funniest Male Performer in a TV Special
2000 பிகர் & பிளாக்கர்

காமெடி சென்ட்ரல் தொலைக்காட்சி நிறுவனமால் வரலாற்றில் ஐந்தாம் மிகச்சிறந்த மேடைச் சிரிப்புரையாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிஸ் ராக் தென் கரொலைனாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளந்தார்.

1985இல் மேடைச் சிரிப்புரையில் ஆரம்பித்து எடி மர்ஃபி இவரை கண்டு அவரின் திரைப்படம் பெவர்லி ஹில்ஸ் காப் 2-இல் ஒரு பாத்திரத்தை கிரிஸ் ராக்குக்கு கொடுத்தார். 1990இல் பிரபலமான அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி சாட்டர்டே நைட் லைவில் சேர்ந்து 1993 வரை இந்த நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.

1996இல் ப்ரிங் த பெய்ன் என்ற நகைச்சுவைக் காட்சியை படைத்து இரண்டு எமி விருதை வென்று அமெரிக்காவில் மிக புகழ்பெற்ற மேடைச் சிரிப்புரையாளர்களில் ஒன்றானார். இதற்கு பிறகு திரைப்படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்த ஆரம்பித்தார். டாக்மா, த லாங்கெஸ்ட் யார்ட், பாட் கம்பெனி, ஹெட் அஃப் ஸ்டேட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2005இல் சிறுவர் கிரிஸ் ராக்கை பற்றி எவ்ரிபடி ஹேட்ஸ் கிரிஸ் என்ற நகைச்சுவை தொடர் தொடங்கியுள்ளது. இத்தொடரில் கிரிஸ் ராக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். பல கண்டிப்பவர்கள் இத்தொடருக்கு நன்றாக விமர்சனங்கள் செய்துள்ளனர்.

பொதுவாக கிரிஸ் ராக்கின் நகைச்சுவைக் காட்சிகளில் அமெரிக்க அரசியல், ஆபிரிக்க அமெரிக்கப் பண்பாடு, பாலியல், இனப் பாகுபாடு போன்ற கருப்பொருள்களைப் பற்றி பேசுவார்.

மேற்கோள்கள்

  1. Album covers featured in the opening credits of Chris Rock: Bring the Pain, HBO, 1996.
  2. Wolk, Josh (2004-03-19). "Chris Rock On Fire". Entertainment Weekly. பார்த்த நாள் 2007-10-13.
  3. "George Lopez at MySpace". பார்த்த நாள் 2007-10-12.
  4. Weiss, Rebecca (2007-04-27). "Christian Finnegan Chats". The Cornell Daily Sun. பார்த்த நாள் 2007-10-15.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.