கிராபைட்டு
கிராபைட்டு (Graphite, plumbago) என்பது நிலக்கரியின் மாறுபட்ட வடிவம் ஆகும்.[5] திட்ட வெப்ப அழுத்தச் சூழ்நிலைகளில், இது மிகவும் நிலையாக இருக்கும். இந்த இயல்பினாலேயே தான், வெப்ப வேதியியலில், கரிம கூட்டுப் பொருட்களுடன் பயன்படுத்தப் படுகிறது. கிராபைட்டு (Graphite) (அடர்த்தி : 2' 25). இதுவே நாம் எழுதும் பென்சிலின் கூரிலுள்ள பொருள் ஆகும். 'கிராபோ' என்றால் ' நான் எழுதுகிறேன்' என்று பொருள். கம்பர்லாந்து, சைபீரியா, பொஹீமியா. இலங்கை முதலிய இடங்களில் கிராபைட்டு அகப்படுகிறது. இந்தியாவிலும் சிறிதளவு கிடைக்கிறது. இலங்கையில் கிடைப்பது சிறந்த வகையான கிராபைட்டு ஆகும்.
கிராபைட்டு | |
---|---|
![]() மாதிரிப்பொருள் | |
பொதுவானாவை | |
வகை | நிலையான தாது |
வேதி வாய்பாடு | C |
இனங்காணல் | |
நிறம் | இரும்பு சார்ந்த கருப்பு, சாம்பல், கருநீலம் |
படிக இயல்பு | Tabular, six-sided Foliation (geology)masses, granular to compacted masses |
படிக அமைப்பு | Hexagonal crystal system |
இரட்டைப் படிகமுறல் | இன்று வரை |
பிளப்பு | Basal – perfect on {0001} |
முறிவு | Flaky, otherwise rough when not on cleavage |
விகுவுத் தன்மை | Flexible non-elastic, sectile |
மோவின் அளவுகோல் வலிமை | 1–2 |
மிளிர்வு | Metallic, earthy |
கீற்றுவண்ணம் | கருமை |
ஒளிஊடுருவும் தன்மை | Opaque, transparent only in extremely thin flakes |
ஒப்படர்த்தி | 1.9 – 2.3 |
அடர்த்தி | 2.09–2.23 g/cm3 |
ஒளியியல் பண்புகள் | Uniaxial (–) |
பலதிசை வண்ணப்படிகமை | உறுதி |
கரைதிறன் | Soluble in molten நிக்கல், warm chlorosulfuric acid[1] |
பிற சிறப்பியல்புகள் | strongly anisotropic, conducts electricity, greasy feel, readily marks |
மேற்கோள்கள் | [2][3][4] |
உருவாக்கம்
கிராபைட்டை செயற்கையாகவும் தயாரிக்கலாம் அச்சஸன் (Acheson) முறை என்பதில் செங்கல்லினால் செய்த மின் உலையில் மணலும் பொடியான கல்கரியும் (Coke) சு. 24 மணி நேரம் கடுமையாகச் சூடேற்றப் படும். கரியும் மணலும் சேர்ந்து சிலிக்கன் கார்பைடை,யும் கார்பன் மானாக்சைடையும் தருகின்றன. அதிக வெப்ப நிலையில், சிலிக்கன் வாயு வடிவில் வெளியேறக் கிராபைட்டுத் தங்குகிறது. இச்செயற்கைக் கிராபைட்டு அதிக விலையுள்ளது. கிராபைட்டு படிகம் மிருதுவானது. தொட்டால் பிசு பிசுப்பாக இருக்கும், கறுப்பு நிறம். பளபளப்பான அறுமுக வடிவமுடையது. காகிதத்தில் கறுப்புக்கோடு கிழிக்கும். நல்ல மின்கடத்தி, வெப்பக் கடத்தி. இரும்புக்கு மெருகேற்றவும் அது துருப்பிடிக்காமலிருக்கச் செய்யவும் பயன்படுகிறது. 690°-ல் எரிந்து, கார்பன்டையாக்சைடாகிறது. கிராபைட்டையும் மணலையும் சேர்த்து அதிக சூடு தாங்கும் மூசைகள் செய்கிறார்கள். கிராபைட்டையும், பிசைந்த களிமண்ணையும் சேர்த்துப், பென்சில் கூர்கள் செய்கிறார்கள். நீர்த்த டானினில் (Tannin), கிராபைட்டைக் கலந்து, எந்திரங்களுக்குப் போடும் உயவுப் பொருளாக அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
தோற்றம்
கார்பன் (Carbon, கரி) : குறியீடு : C; அணு நிறை 12•00 ; அணு எண் 6 ; உருகுநிலை 3,500° ; கொதிநிலை 4,200°. ஓரே மூலப்பொருள் பல தோற்றங்களில் விளங்குவதற்குக் கார்பன் ஒரு சிறந்த உதாரணம். வைரம், கிராபைட்டு, நிலக்கரி, மரக்கரி எல்லாம் கார்பனின் தோற்றங்கள். ஒரு குறிப்பிட்ட எடையுள்ள கரி, வைரம், கிராபைட்டு இவற்றைத் தனித்தனியே ஆக்சிஜனில் எரித்தால் ஒரே எடையுள்ள கார்பன்டையாக் சைடு வாயு கிடைக்கிறது. மூன்று பொருள்களிலும் இருக்கும்பொருள் கார்பன் தான் என்பதை இந்தச் சோதனை காட்டுகிறது. ஆதிகாலத்தில் மண்ணெல்லாம் உருகிக் குழம்பாக இருந்தபோது, கரி அதனுடன் திரவ வடிவத்தில் சேர்ந்திருந்தது. மண் குளிர்ந்து அழுத்தம் மிகுந்த போது அக்கரி படிக்க உருவம் பெற்று வைரமாகவும், கிராபைட்டாகவும் மாறிற்று என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
கிராபைட்டை செயற்கையாகவும் தயாரிக்கலாம்.இதைத் தொழிற்சாலைக்கு எடுத்துச்சென்று அதன்மீது சஸன் (Acheson) முறை என்பதில் செங்கல்லினால் தண்ணீரைப் பாய்ச்சுகிறார்கள். இலேசான பொருள் செய்த மின் உலையில் மணலும் பொடியான கல்கரியும் களைத் தண்ணீர் அடித்துச் செல்லுகின்றது ; கனமான (Coke) 24 மணி நேரம் கடுமையாகச் சூடேற்றப் பொருள்கள் அடியில் தங்குகின்றன. இப்பொருள் படும்.
மேற்கோள்கள்
- Liquid method: pure graphene production. Phys.org (May 30, 2010).
- Graphite. Mindat.org.
- Graphite. Webmineral.com.
- "Graphite" (PDF). Handbook of Mineralogy. I (Elements, Sulfides, Sulfosalts). Chantilly, VA, US: Mineralogical Society of America. 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0962209708. http://rruff.info/doclib/hom/graphite.pdf.
- "The types of coal". Coal - a traditional source of energy. OKD (2012). மூல முகவரியிலிருந்து 2015-11-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-08-24.
வெளி இணைப்புகள்
- Battery Grade Graphite
- Graphite at Minerals.net
- Mineral galleries
- Mineral & Exploration – Map of World Graphite Mines and Producers 2012
- Mindat w/ locations
- giant covalent structures
- The Graphite Page
- Video lecture on the properties of graphite by Prof. M. Heggie, University of Sussex
- CDC – NIOSH Pocket Guide to Chemical Hazards