கிண்ணியா

கிண்ணியா (Kinniya) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். திருகோணமலை நகரில் இருந்து கிட்டத்தட்ட 20 கிமீ தூரத்திலும், தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவிலும் இந்த நகரம் அமையப் பெற்றுள்ளது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதொரு பிரதேசமாகும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழில் கொண்டது இந்நகர். இலங்கையிலேயே மிக நீளமான கடல் மேல் பாலம் கிண்ணியாவிலேயே அமைந்துள்ளது.

கிண்ணியா
நகரம்
கிண்ணியா பாலம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்திருகோணமலை
பிசெ பிரிவுகிண்ணியா
அரசு
  வகைநகரசபை
  தலைவர்முகம்மது மகரூப் இல்மி (ஐமசுகூ)

ஏறக்குறைய 35,000 பேர் இங்கு வாழ்கின்றனர். [1] இவர்களில் 97% தமிழ் பேசும் முஸ்லிம்களும், ஏனையோர் தமிழர்களும் ஆவர்.

2004 ஆழிப்பேரலையின் போது இந்நகர் பெரும் அழிவைச் சந்தித்தது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "City Population". www.citypopulation.de. பார்த்த நாள் 2008-12-30.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.