காவேரி (திரைப்படம்)

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

காவேரி
இயக்கம்டி. யோகானந்த்
தயாரிப்புமேனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
இசைஜி. ராமநாதன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
நம்பியார்
பி. எஸ். வீரப்பா
என். எஸ். கிருஷ்ணன்
பத்மினி
லலிதா
எஸ். டி. சுப்புலட்சுமி
ராகினி
எம். சரோஜா
டி. ஏ. மதுரம்
வெளியீடுசனவரி 12, 1955 [1]
நீளம்16127 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம். பாடியவர்கள் சிதம்பரம் ஜெயராமன், எம். எல். வசந்தகுமாரி. நடிப்பு சிவாஜி கணேசன், லலிதா. கல்யாணி இராகத்தில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல். பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி

நடிப்பு

நடனம்

தயாரிப்புக் குழு

  • தயாரிப்பு: லட்சுமணன் செட்டியார்
  • தயாரிப்பு நிறுவனம்: கிருஷ்ணா பிக்சர்ஸ்
  • இயக்குநர்: டி. யோகானந்த்
  • திரைக்கதை, வசனம்: ஏ. எஸ். ஏ. சாமி
  • கலை: கங்கா
  • தொகுப்பு: வி. பி. நடராஜன்
  • நட்டுவாங்கம்: வழுவூர் பி. இராமையா பிள்ளை, ஹீராலால், சோகன்லால்
  • ஒளிப்பதிவு: எம். ஏ. ரஹ்மான், பி. இராமசாமி
  • சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சோமு
  • ஒலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி
  • ஆடைகள்: ஏ. நடேசன்

பாடல்கள்

ஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். பாடல்களை உடுமலை நாராயண கவி இயற்றினார்.[3]

No.பாடல்பாடகர்/கள்அளவுஇசையமைப்பாளர்
1மஞ்சள் வெயில் மாலையிலேசி. எஸ். ஜெயராமன் & எம். எல். வசந்தகுமாரி05:22ஜி. ராமநாதன்
2என் சிந்தை நோயும் தீருமாஜிக்கி03:08
3அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோசி. எஸ். ஜெயராமன் & ஜிக்கி03:58
4ஏழெட்டு நாளாகத்தான்என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், ஏ. பி. கோமளா, ஜிக்கி, ஏ. ஜி. ரத்னமாலா,எஸ். ஜே. காந்தா
5சந்தோஷம் இல்லாமே சாப்பாடும் இல்லாமேஜிக்கி04:09
6சரியில்லே மெத்தச் சரியில்லேஎன். எஸ். கிருஷ்ணன்
7சிவகாம சுந்தரி.... கண்ணா நீ எந்தன் காதல் உன்னருளால்ஜிக்கி03:21
8சிங்கார ரேகையில்பி. லீலா03:32விஸ்வநாதன்-ராமமூர்த்தி
9குடித்தன முறைமை படித்திட வேணும்பி. லீலா & ஏ. ஜி. ரத்னமாலா
10மனதிலே நான் கொண்டஎம். எல். வசந்தகுமாரி
11மாங்காய் பாலுண்டு மாலை மேல்சி. எஸ். ஜெயராமன்02:06சி. எஸ். ஜெயராமன்
12சிந்தை அறிந்து வாடி செல்வக்குமரன்சி. எஸ். ஜெயராமன்01:15
13காலைத் தூக்கி நின்றாடும்சி. எஸ். ஜெயராமன்

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 30 January 2017. https://web.archive.org/web/20170129231110/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails9.asp.
  2. ராண்டார் கை (20 அக்டோபர் 2013). "Kaveri (1959)". தி இந்து. Archived from the original on 13 December 2013. http://archive.is/IIXUH. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.