டி. கே. ராமமூர்த்தி

டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.

டி. கே. இராமமூர்த்தி
இயற்பெயர்கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி
பிறப்பு15 மே 1922 (1922-05-15)
பிறப்பிடம்திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம்
இறப்பு17 ஏப்ரல் 2013(2013-04-17) (அகவை 90)
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி
ஆர்மோனியம்
வயலின்
இசைத்துறையில்1950கள்-1970கள்

இசையமைத்த திரைப்படங்கள்

19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:

எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை

எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.

விரிவான தரவுகளுக்கு -

மறைவு

இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.