காரல் வில்லெம் சீலெ

காரல் வில்லெம் சீலே (Carl Wilhelm Scheele, 9 திசம்பர் 1742 – 21 மே 1786) சுவீடனின் பொமேரானியாவைச் சேர்ந்த மருந்தியல் வேதியியலாளர் ஆவார். பொதுவாக மற்றவர்கள் கண்டுபிடித்ததாக பெருமைப்படுத்தப்படும் பல வேதியியல் கண்டுபிடிப்புகளை இவர் முன்னதாகவே கண்டுபிடித்திருந்ததால் இவரை "துரதிருட்ட சீலே" என்று ஐசாக் அசிமோவ் கூறுவார். காட்டாக, சீலே ஆக்சிசனை (சோசப்பு பிரீசிட்லி தமது கண்டுபிடிப்பை முதலில் பதிப்பித்தப் போதிலும்) கண்டுபிடித்தார்; இதேபோல மாலிப்டினம், தங்குதன், பேரியம், நீரியம், மற்றும் குளோரின் தனிமங்களை ஹம்பிரி டேவிக்கு முன்னதாகவே அடையாளம் கண்டார். சீலே கரிம அமிலங்களான தார்தாரிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், யூரிக் அமிலம், லாக்டிக் அமிலம், மற்றும் சிட்ரிக் அமிலங்களையும் ஐதரோபுளோரிக், ஐதரசன் சயனைடு, ஆர்செனிக் அமிலங்களையும் கண்டுபிடித்துள்ளார்.[1] தமது வாழ்நாள் முழுவதும் செருமானிய மொழியிலேயே உரையாடி வந்தார்.[2]

காரல் வில்லெம் சீலே
காரல் சீலே
பிறப்பு9 திசம்பர் 1742
இசுட்ரால்சுன்ட், சுவீடிய பொமெரானியா, இன்றைய செருமனி
இறப்பு21 மே 1786 (அகவை 43)
கோபிங், சுவீடன்
தேசியம்செருமானிய-சுவீடியர்
துறைவேதியியல்
அறியப்படுவதுஆக்சிசன் (தனியே), மாலிப்டினம், தங்குதன், குளோரின், மற்றும் பிற கண்டுபிடித்தவர்
கோபிங்,சுவீடனில் உள்ள சீலேயின் இல்லமும் மருந்தகமும்.

பதிப்பித்த ஆய்வுகள்

கீழ்கண்ட அனைத்து ஆய்வுக்கட்டுரைகளும் பதினைந்தாண்டுகளுக்குள் சீலேயால் பதிப்பிக்கப்பட்டவை.[3]

  1. (1771) புளோரைட்டு (புளோசுபார்) மற்றும் அதன் அமிலம்
  2. (1774) "பிராயுன்சுட்டீன்" அல்லது மக்னீசியா [ மாங்கனீசு ], இரு கட்டுரைகள்
  3. (1775) பென்சாயின் உப்பு [ பென்சாயிக் அமிலம் ]
  4. ஆர்சனிக் மற்றும் அதன் அமிலம்
  5. சிலிக்கா, அலுமினா, படிகாரம்
  6. சிறுநீரக கற்கள்
  7. (1777) காற்று , தீ குறித்த வேதியியல் டிரீடீசு
  8. (1778) மெர்குரியசு டுல்சிசு தயாரிக்க நீர்ம செய்முறை [ பாதரச குளோரைடு ]
  9. புல்விசு அல்கரோதி தயாரிக்க எளிய செய்முறை [ அன்டுமனியின் ஆக்சிகுளோரைடு ]
  10. மாலிப்டினம்
  11. புதிய பச்சை வண்ணம் தயாரிப்பு
  12. (1779) வளிமண்டலத்தில் நாளுமிருக்கும் தூய்மையான காற்றின் அளவு
  13. சுண்ணாம்பு அல்லது இரும்பு கொண்டு நடுநிலையுப்புகளின் பிரிகை
  14. பிளம்பாகோ
  15. பாரைட்டு (கனமான சுண்ணாம்புக்கல்)
  16. (1780) புளோசுபார்
  17. பாலும் அதன் அமிலங்களும்
  18. பால் சர்க்கரையின் அமிலம்
  19. On the Relationship of Bodies
  20. (1781) தங்குதன்
  21. கச்சா சுண்ணாம்பில் உள்ள எரியும் பொருட்கள்
  22. வெள்ளை ஈயம் தயாரிப்பு
  23. (1782) ஈதர்
  24. புளிங்காடியின் புரத்தல்
  25. பெர்லின் நீலத்திலுள்ள வண்ணப்பொருள்
  26. (1783) பெர்லின் புளூ
  27. எண்ணெய், கொழுப்புகளிலிருந்து வினோத இனிப்பு கொள்கை [ கிளிசரால் ]
  28. (1784) எலுமிச்சை சாறை படிகமாக்கும் முயற்சி
  29. ரூபார்ப்-மண்ணின் உள்ளடக்கங்கள் [ கால்சியம் ஆக்சலேட் ] மற்றும் அசெடோசெல்லா அமிலம் தயாரிப்பு [ ஆக்சாலிக் அமிலம் ]
  30. "பிளட் ஐ"யின் "நடு-உப்பு" வண்ணமிடல் [பொட்டாசியத்தின் மஞ்சள் புருசியேட்டு]
  31. காற்று-அமிலம் [ கார்பானிக் அமிலம் அல்லது காபனீரொக்சைட்டு ]; பென்சாய்க் அமிலம். லாபிசு இன்பெர்னலிசு
  32. எண்ணெய், கொழுப்புகளின் இனிய கொள்கை. காற்று-அமிலம்
  33. (1785) பழங்களின் அமிலம், குறிப்பாக இராசுபெர்ரி
  34. இரும்பு பாசுபேட்டு; மற்றும் பேர்ல்-உப்பு
  35. வெவ்வேறு தாவரங்களில் ரூபார்ப்-மண் [ 29 காண்க] இருத்தல்
  36. மகனீசியம் ஆக்சைடு (மக்னீசிய அல்பா) தயாரிப்பு
  37. ஓசையுடன் வெடிக்கும் தங்கம். கார்ன் ஆயில் [ ஃபூசல் எண்ணெய் ]. கலோமெல்
  38. காற்று-அமிலம்
  39. ஈயம் இரசக்கலவை
  40. வினேகர்-நாஃப்தா
  41. சுண்ணாம்பு. அமோனியா அல்லது ஆவியாகும் காடி
  42. மேலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம்
  43. காற்று, தீ, மற்றும் நீர்
  44. (1786) காலின் முக்கிய உப்புக்கள் [ காலிக் அமிலம் ]
  45. நைட்ரிக் காடி
  46. ஈயத்தின் ஆக்சைடு. புகைசல்பூரிக்கமிலம்
  47. பைரோபோரசு
  48. ஐதரோபுளோரிக் அமிலத்தின் தனித்தன்மைகள்

மேற்சான்றுகள்

  1. Richard Myers, The Basics of Chemistry (2003)
  2. Fors, Hjalmar 2008. Stepping through Science’s Door: C. W. Scheele, from Pharmacist's Apprentice to Man of Science. Ambix 55: 29-49

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.