ஹம்பிரி டேவி

சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy: 17 டிசம்பர், 1778 – 29 மே, 1829) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின்,சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார்.[1] டேவி மிகச்சிறந்த மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆவார்.[2][3] 1815 இல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இவரது கண்டுபிடிப்பான காப்பு விளக்கு உதவியது.

சர் ஹம்பிரி டேவி
உருவப்படம்-தாமஸ் பிலிப்ஸ்
பிறப்புதிசம்பர் 17, 1778(1778-12-17)
இங்கிலாந்து
இறப்பு29 மே 1829(1829-05-29) (அகவை 50)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவேதியல்
பணியிடங்கள்ராயல் கழகம், ராயல் நிறுவனம்
அறியப்படுவதுமின்னாற்பகுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், டேவி விளக்கு
பின்பற்றுவோர்மைக்கேல் பாரடே, வில்லியம் தாம்சன்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. "On Some Chemical Agencies of Electricity". [ttp://www.english.upenn.edu/Projects/knarf/Davy/davy5.html மூல முகவரியிலிருந்து] 2007-10-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-03-02.
  2. Jöns Jacob Berzelius; trans. A. Jourdan and M. Esslinger (1829–1833) (in French). Traité de chimie. 1 (trans., 8 vol. ). Paris. பக். 164., (in Swedish) Larbok i kemien (Original ). Stockholm. 1818.
  3. Levere, Trevor H. (1971). Affinity and Matter – Elements of Chemical Philosophy 1800–1865. Gordon and Breach Science Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2-88124-583-8.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.