காதற்கடிதம்
காதற்கடிதம் (Love letter) என்பது காதல் உணர்வுகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தி எழுதும் கடிதம் ஆகும். ஒருவர் தான் காதலிப்பவரிடம் இதனை நேரடியாகக் கொடுப்பார். அல்லது அஞ்சல் வழியாகவோ புறா மூலமாகவோ நண்பர் மூலமாகவோ அனுப்புவார்.[1] சில வேளைகளில் காதற்கடிதத்தை மறைவான ஓரிடத்தில் ஒளித்து வைத்து விடுவதுமுண்டு.[2] முதன்முறையாகக் காதலைத் தெரிவிப்பதற்காக மட்டுமன்றி, மனைவிக்கோ காதலிக்கோ கூடக் காதற்கடிதத்தை எழுதுவதுண்டு.[3] காதற்கடிதம் எழுதும் வழக்கம் தற்போது குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது.[4][5]

மேரி பாட்டலி தின்மேனின் (Marie Spartali Stillman) காதலின் தூது ஓவியம்

சொகான்னெசு வெருமீரின் காதற்கடித ஓவியம்

காதற்கடிதத்தைத் திறப்பதைக் காட்டும் அமீடியோ மோமோ சிமொனெற்றியின் ஓவியம்
திரைப்படங்களில்
- 1991ஆம் ஆண்டில் வெளிவந்த சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தில் சௌந்தர்யன் எழுதிய காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[6]
- 1992ஆம் ஆண்டில் வெளிவந்த குணா என்ற திரைப்படத்தில் காதலன், காதலிக்கான கடிதத்தைக் காதலியைக் கொண்டே எழுதுவிப்பதாக, கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.[7] இப்பாடலை வாலி எழுதியிருந்தார்.[8]
- 1995ஆம் ஆண்டு வெளிவந்த தேவா என்ற திரைப்படத்தில் வாலி எழுதிய ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[9]
- 1999ஆம் ஆண்டு வெளிவந்த சோடி என்ற திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[10]
- 2008ஆம் ஆண்டு, காதல் கடிதம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகியது.[11]
- 2010ஆம் ஆண்டு, 365 காதல் கடிதங்கள் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகியது.[12]
- 2013ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா இலட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் கானா பாலா எழுதிய இலவு இலெற்றரு எழுத ஆசைப்பட்டேன் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[13]
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
- ஜி. அசோக் (2012 செப்டம்பர் 20). "காதல் மாறவில்லை!". தினமணி. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 5.
- Daisy Greenwell (2011 மார்ச் 15). "Where to hide your love letters". The Times. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 5.
- "Whatever happened to love letters?". Mail Online (2002 அக்டோபர் 11). பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- Himay Zepeda (2014 ஆகத்து 12). "Why You Should Write Love Letters". Huffington Post. பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- Rajyasree Sen (2015 ஆகத்து 13). "Missing love letters in the age of sexting and Snapchat". Firstpost. பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு". பாடல். பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- Rajshri Tamil (2009 செப்டம்பர் 25). "Kanmani Anbodu Kadhalan-Guna Tamil Song-Kamal Haasan, Roshini". YouTube. பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- "Vaali Super Hit Numbers". Raaga. பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- "Deva". Magnasound. பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- "Vairamuthu's Romantic Hits". Raaga. பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- "2008ம் ஆண்டின் தமிழ் திரைப்பட கண்ணோட்டம்". தினமலர் சினிமா (2009 சனவரி 2). பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
- "365 Kadhal Kadithankal Tamil Movie". Spicyonion. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 5.
- "கண்ணா லட்டு தின்ன ஆசையா விமர்சனம்". தினகரன். பார்த்த நாள் 2015 ஆகத்து 13.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.