காஜுவாக்கா

காஜுவாக்கா (Gajuwaka, தெலுங்கு: గాజువాక) இந்திய மாநிலம் ஆந்திராவின் கிழக்குக் கடற்கரையோர பெருநகரமான மகா விசாகப்பட்டினம் மாநகராட்சியின் ஓர் மண்டலமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 258,944 ஆகும். இங்கு பல தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

காஜுவாக்கா
  நகரம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் விசாகப்பட்டினம்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்கள் தொகை 2,58,944 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள்தொகையியல்

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 258,944 ஆகும். மக்கள்தொகையில் ஆடவர் 52% ஆகவும் மகளிர் 48% ஆகவும் உள்ளனர். காஜுவாக்காவின் படிப்பறிவு தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாக 70%ஆக உள்ளது; ஆண்களின் படிப்பறிவு:77%,பெண்களின் படிப்பறிவு:63%. ஆறு அகவைக்கும் குறைந்தோர் மொத்த மக்கள்தொகையில் 12%ஆக உள்ளனர்.

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.