காசாபா தாதாசாகேப் சாதவ்
காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 – ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1996 ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிசில் வெண்கலப் பதக்கத்தைப் பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம் ஆகும்.இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், இவரின் இறுதிக் காலம் வறுமையிலே முடிந்தது.
காசாபா தாதாசாகேப் சாதவ் Khashaba Jadhav | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜனவரி 15, 1926 |
இறப்பு | ஆகஸ்ட் 14, 1984 |
இருப்பிடம் | சட்டாரா,மகாராஷ்டிரா,இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | மற்போர் வீரர் |
வென்ற பதக்கங்கள் | |||
---|---|---|---|
ஆண்களுக்கான மற்போர் | |||
வெண்கலம் | 1952 ஹெல்சிங்கி | Bantamweight |
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
- 1993ம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசு இவருக்கு சிவ் சத்ரபதி விருது வழங்கி கௌரவித்தது.2001ம் ஆண்டில் ஒன்றிய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. இரு விருதுகளும் சாதவ் இறந்து பல பத்தாண்டுகள் கழிந்த பின்னர் வழங்கப்பட்டன.
- புதுதில்லியில் புனரமைக்கப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்யுத்த வளாகத்துக்கு ஒன்றிய அமைச்சகம் இவருடைய பெயரை சூட்டியுள்ளது.
- 1996 முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்று வந்த வீரர்கள் அனைவரும் பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் . சாதவ் மட்டுமே பத்ம விருது பெறாத ஒலிம்பிக் பதக்க வீரராவார் .
- இறந்து விட்டவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குவது பற்றிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிகளின் படி இவருக்கு பத்ம விருது வழங்கப்படாது. “பொதுவாக பத்ம விருதுகள் இறந்து விட்டவருக்கு வழங்கப்பட மாட்டாது. இருப்பினும், மிகவும் சாலப் பொருத்தமான நபர்களுக்கு, அரசு ஒரு நிபந்தனைக்குட்பட்டு இந்த விருதை வழங்கலாம்.
- கௌரவிக்கப்படவுள்ள நபர் மிக அண்மையில், அதாவது இந்த விருதுகள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வரும் குடியரசு தினத்துக்கு முந்தைய ஓராண்டு காலத்துக்குள் இறந்திருந்தால் அவருக்கு பத்ம விருது வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கலாம்” என்று உள்துறை அமைச்சகத்தின் விதி கூறுகிறது.[1]
திரைப்படம்
இவரது வாழ்க்கையை ’பாக்கெட் டைனமோ' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
- தாஸ் (12 சனவரி 2014). "இந்திய அரசு முதல் ஒலிம்பிக் பதக்க வீரரை மறந்துவிட்டது". தீக்கதிர்: pp. 8. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 சனவரி 2014.
- http://movies.ndtv.com/bollywood/riteish-deshmukh-to-produce-biopic-pocket-dynamo-633331
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.