கவின் (நடிகர்)

கவின் ராஜ் (Kavin Raj, பிறப்பு 22 சூன் 1990) என்பவர் ஒரு இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.

கவின் ராஜ்
பிறப்பு22 சூன் 1990 (1990-06-22)
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி
இருப்பிடம்தமிழ்நாடு, சென்னை,
பணிநடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒகுப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011-தற்போதுவரை

ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் மூலமாகவே குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். முறையாக நடிப்பைக் கற்றுக்கொள்ள, கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார்.[1] பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி நடிகராக தன் வாழ்வைத் துவக்கினார். இவர் கனாகாணும் காலங்கள் தொடரில் சிவா என்னும் பாத்திரத்தில் நடித்தார், பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் முருகன் மற்றும் சரவணன் மீனாட்சி பகுதி 2 இல் வேட்டையனாக நடித்தார். இவர் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். இவர் தற்போது ஸ்டார் விஜயில் கிங்ஸ் ஆப் டான்ஸ் என்று ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். இவர் விரைவில் விக்ரம் பிரபுவின் திரைப்படமான முடி சூடா மன்னன் திரைப்படத்தில் இணை நடிகராக உள்ளார்.விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ்3 (2019) நிகழ்ச்சியில் தற்போது ஒரு பிரபலமாக உள்ளார்.

தொலைக்காட்சி நடிகராக

ஆண்டு
தொடர்
பாத்திரம்
குறிப்பு
2011-2012 கனாகாணும்

காலங்கள்

சிவா
2013-2014 தாயுமானவன்
விக்கி
2012-2013 சரவணன் மீனாட்சி முருகன்
2013-2016 சரவணன் மீனாட்சி வேட்டையன்
சிறந்த கதாநாயகனாக விஜய் தொலைக்காட்சி விருது

திரைப்படம்

ஆண்டு
திரைப்படம்
பாத்திரம்
குறிப்பு
2012 பீட்சா கவுரவத்

தோற்றம்

2015 இன்று நேற்று

நாளை

கவுரவத்

தோற்றம்

2016 முடிசூடா

மன்னன்

கவுரவத்

தோற்றம்[2]

படப்பிடிப்பில்
2016 நட்புன்னா என்னான்னு தெரியுமா
நாயகனாக படப்பிடிப்பில்[3]

தொலைக்காட்சி தொகுப்பாளர்

மேற்கோள்கள்

  1. "சரவணன் மீனாட்சி சீரியல் எப்போ முடியும்? - உண்மை சொல்கிறார் ‘வேட்டையன்’". செவ்வி. விகடன் சினிமா (2016 பெப்ரவரி 16). பார்த்த நாள் 7 செப்டம்பர் 2016.
  2. "தினிமா ஹீரோவான கவின் ராஜ்". தினமலர் (21016 செப்டம்பர் 6). பார்த்த நாள் 7 செப்டம்பர் 2016.
  3. "சினிமாவுக்கு வரும் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோக்கள்: கவின் ஜோடி ரம்யா நம்பீசன்". செய்தி. tamil.filmibeat.com/ (2016 செப்டம்பர் 6). பார்த்த நாள் 7 செப்டம்பர் 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.