கதிரவ அனல்மானி

கதிரவ அனல்மானி (Pyrheliometer) சூரிய ஒளிவீச்சை நேரடியாக அளக்கப் பயன்படுகிறது.[1] சூரிய ஒளி கருவியிலுள்ள திறப்பு வழியாக நுழைந்து வெப்பமின்னடுக்கை அடைகிறது. அது வெப்பத்தை மின் அலையாக பதிவேற்றுகிறது. குறிப்பலையின் மின்னழுத்தம் வாட்/சதுர மீட்டர் (watts per square metre) என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது.[2] இதனுடன் சூரியனை நோக்கியே இருக்கும் கருவியும் (solar tracking system) இணைக்கப்பட்டுள்ளது. சூரியக்கதிர்வீச்சு செறிவுஅளவி (pyranometer) என்ற கருவியைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதிரவ அனல்மானி, சூரியக் கதிர்வீசலை அறிய உதவுகிறது.
கதிரவ அனல்மானி: (3) நடுப்பகுதி, (4) பாதுகாக்கும் முகப்பு, (5) சூடேற்றியுடன் கூடிய சன்னல், (2) பார்வையிடும் பகுதி, (1)ஈரப்பதம் சுட்டுகருவி, (7) கம்பி வடம்

தரநிலைகள்

சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) மற்றும் அனைத்துலக வானிலை நிறுவனம் (World Meteorological Organization) (WMO) ஆகியவையே கதிரவ அனல்மானியின் தரத்தை நிர்ணயிக்கின்றன. கதிரவ அனல்மானிகளுக்கிடையே இடை அளவீடு (intercalibration) எடுக்கப்பட்டு, பெறப்பட்ட சூரிய ஆற்றலின் அளவு கணக்கிடப்படுகிறது. இத்தாலி நாட்டில் தாவோசு நகரிலுள்ள உலக கதிர் இயக்க மையத்தில் (World Radiation Centre) இந்த அளவுகள் 5 ஆண்டுகளுக்கு[3] ஒரு முறை ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.[4]. இதன் மூலம் அனைத்து நாடுகளும், தங்களுக்குள்ளே சூரிய கதிரியக்க செயல்பாடுகளை ஒப்பிட்டு கொள்கின்றன.[5]

பயன்கள்

கதிரவ அனல்மானிகள் அறிவியல் சார்ந்த, வானிலை சார்ந்த மற்றும் காலநிலை சார்ந்த அளவீடுகளையும், பொருட்களின் தரத்தை ஆராயவும், சூரிய வெப்ப சேகரிப்பான் மற்றும் ஒளிமின்னழுத்திய கருவிகள் செயல்திறனை (efficiency) மதிப்பிடவும் பயன்படுகிறது.

உபயோகிக்கும் முறை

சூரியனை நோக்கியே இருக்கும் கருவியுடன், இவை பயன்படுத்தப்படுகின்றன. சூரிய வட்டத்தை நோக்கி அமைக்கப்பட்டு, சூரியனின் பாதையை நோக்கியே செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.