கட்டடக்கலைப் பாணி

கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும், உருவம், கட்டிடப்பொருட்கள் என்பவை உட்பட, தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டிடங்களை அல்லது கட்டிடக்கலையை வகை பிரிக்கும் ஒரு முறை எனலாம். இவ்வாறு தோற்றம் சார்ந்த வகைபிரித்தல் முறை கட்டிடக்கலை முறையாக விளங்கிக் கொள்வதற்குரிய ஒரு முழுதளாவிய (holistic) முறையல்ல. இது பற்றிய ஆய்வுகள், கட்டிடக்கலை வரலாறு மற்றும் படிமலர்ச்சி போன்ற துறைகளோடு பெரிதும் ஒத்திருக்கின்றது. கட்டிடக்கலை வரலாற்றில் கோதிக் கட்டிடக்கலை பற்றி ஆய்வு செய்யும்போது, அக் கட்டிடக் கலைவடிவம் உருவாகக் காரணமான எல்லா விதமான சூழலும், பின்னணியும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் கட்டிடக்கலையை வகைப்படுத்தும் கட்டிடக்கலைப் பாணி பற்றிய ஆய்வுகள், அக்கட்டிடக்கலையின் சிறப்பு இயல்புகளையே முன்னிலைப் படுத்துகின்றன. இந்த அணுகுமுறை மூலமே "கோதிக் பாணி" போன்ற சொற் பயன்பாடுகள் உருவாகின்றன. கோதிக் கட்டிடக்கலை என்னும் சொற்றொடர் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவான கட்டிடக்கலையைக் குறிக்கின்றது. ஆனால், கோதிக் பாணி எனும் சொல், குறிப்பிட்ட சிறப்பு இயல்புகளுடன் கூடிய, அதற்குரிய சூழல், காலம் எதனுடனும் தொடர்பற்ற கட்டிடங்களையும் குறிக்கக் கூடும். அதனால் கோதிக் பாணிக் கட்டிடம் ஒன்றை இன்றும் கட்டிக்கொள்ளமுடியும்.

கட்டிடக்கலை வரலாற்றிலே ஏராளமான கட்டிடக்கலைப் பாணிகள் உருவாகியுள்ளன. இவற்றுட் சில கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன.

  • அமெரிக்கப் பேரரசுப் பாணி (American Empire style)
  • ஆர்க்கிகிறம் (Archigram style)
  • ஆர்ட் டெக்கோ (Art Deco)
  • ஆர்ட் நொவ்வு (Art Nouveau)
  • பரோக் (Baroque)
  • பௌஹவுஸ் பாணி (Bauhaus)
  • பவுக்ஸ் ஆர்ட் பாணி (Beaux-Arts)
  • புரூட்டலிஸ்ட் பாணி (Brutalist)
  • பைசண்டைன் பாணி (Byzantine)
  • சிகாகோ பாணி (Chicago school)
  • கிரேக்கப் பாணி (Greek)
  • ரோமன் பாணி (Roman)
  • காலனித்துவ மறுமலர்ச்சிப் பாணி (Colonial Revival)
  • நார்மன் பாணி (Norman)
  • கட்டவிழ்ப்புப் பாணி (Deconstructivism)
  • வெளிப்பாட்டியப் பாணி (Expressionist)
  • கோதிக் பாணி (Gothic)
  • கோதிக் மறுமலர்ச்சிப் பாணி (Gothic Revival)
  • கிரேக்க மறுமலர்ச்சிப் பாணி (Greek Revival)
  • இந்தோ-இஸ்லாமியப் பாணி (Indo-Saracenic)
  • அனைத்துலகப் பாணி (International style)
  • மத்தியதரைக்கடல் மறுமலர்ச்சிப் பாணி (Mediterranean Revival)
  • நவீன பாணி (Modern)
  • மொரோக்கப் பாணி (Moroccan)
  • நாஸி பாணி (Nazi)
  • நியோகிளாசிசிசம் பாணி (Neoclassicism)
  • ரோமனெஸ்க் பாணி (Romanesque)
  • ரோமனெஸ்க் மறுமலர்ச்சிப் பாணி (Romanesque Revival)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.