ஓர்ச்சா
ஓர்ச்சா (Orchha or Urchha) இந்தியாவின் மத்தியப் பிரதே மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் திகம்கர் மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். ஓர்ச்சா நகரத்தை சந்தேல இராஜபுத்திர மன்னர் ருத்திரபிரதாப சிங் என்பவரால் 1531-இல் நிறுவப்பட்டது.
ஓர்ச்சா ओरछा | |
---|---|
நகரம் | |
![]() ஓர்ச்சா அரண்மனை | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | திகம்கர் |
ஏற்றம் | 552 |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 8,501 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
தொலைபேசி குறியீடு எண் | 07680 |
வாகனப் பதிவு | MP-36 |
இணையதளம் | www.ramrajatempleorchha.com |
பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த கோட்டையுடன் கூடிய ஓர்ச்சா நகரம், ஜான்சியிலிருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
இந்திய விடுதலை அடையும் வரை, பிரித்தானிய இந்திய அரசில் ஓர்ச்சா ஒரு சுதேச சமஸ்தானமாக விளங்கியது.
ஓர்ச்சா நகரத்தின் கோட்டை வளாகத்தை[2] தற்காலிக உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சேர்க்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யுனெஸ்கோவை அணுகியுள்ளனர். [3]
மக்கள் தொகையியல்
2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஓர்ச்சா நகரத்தின் மக்கள் தொகை 8,501 ஆகும்[4] அதில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகள் 18% ஆகும்.
படக்காட்சியகம்
- இராமர் கோயில், ஓர்ச்சா
- பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த சஹத்திரி
- இலக்குமி கோயில், ஓர்ச்சா
- ஓர்ச்சா அரண்மனை வளாகம்
- ஓர்ச்சா மன்னர் பிரதாப் சிங்
மேற்கோள்கள்
- "Orchha". Tikamgarh district website.
- Orchha Fort complex
- MP's Orchha makes it to tentative list of UNESCO World Heritage Sites
- "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.- "Orchha Town". The Imperial Gazetteer of India, Vol. 19. Oxford at Clarendon Press. 1909. பக். 247–248. http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V19_253.gif.
- "Orchha State". The Imperial Gazetteer of India, Vol. 19. Oxford at Clarendon Press. 1909. பக். 241–247. http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V19_247.gif.
வெளி இணைப்பு
- Documentation of orchha buildings by IIT Roorkee
- Genealogy of the ruling chiefs of Orchha
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Orchha- Travelogue and photos of Orchha
- Pictures