ஓரணு அயனி
ஓரணு அயனி (monoatomic ion) என்பது ஒரே ஒரு அணுவைக் கொண்டுள்ள அயனி ஆகும். ஒரு அயனியில் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்கள், அவை ஒரே தனிமத்தின் அணுக்களாக இருந்தாலும் அவ்வயனி பல்லணு அயனி என்று அழைக்கப்படும்.[1] உதாரணமாக கால்சியம் கார்பனேட்டு (CaCO3) என்ற சேர்மத்தை எடுத்துக் கொண்டால் அதில் கால்சியம் (Ca2+) என்ற ஓரணு அயனியும் கார்பனேட்டு (CO32-) என்ற பல்லணு அயனியும் இடம்பெற்றுள்ளன.
முதல் வகை இரும அயனிச் சேர்மங்கள் ஒரே ஒரு வகையான அயனியை உருவாக்கும் உலோகத்தைக் (நேர்மின் துகள்) கொண்டிருக்கும். இரண்டாவது வகை அயனிச் சேர்மங்கள் ஒரே ஒரு உலோகத்தைக் கொண்டிருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட அயனி வகைகளாக உருவாகும். அதாவது வேறுபட்ட மின்சுமை கொண்ட அயனிகள்.
பொது வகை I நேர்மின் அயனி | |
---|---|
ஐதரசன் | H+ |
லித்தியம் | Li+ |
சோடியம் | Na+ |
பொட்டாசியம் | K+ |
ருபீடியம் | Rb+ |
சீசியம் | Cs+ |
மக்னீசியம் | Mg2+ |
கால்சியம் | Ca2+ |
இசுட்ரோன்சியம் | Sr2+ |
பேரியம் | Ba2+ |
அலுமினியம் | Al3+ |
வெள்ளி | Ag+ |
துத்தநாகம் | Zn2+ |
பொது வகை II நேர்மின் அயனி | ||
---|---|---|
இரும்பு(II) | Fe2+ | பெரசு |
இரும்பு(III) | Fe3+ | பெரிக்கு |
தாமிரம்(II) | Cu2+ | குப்ரிக்கு |
தாமிரம்(I) | Cu+ | குப்ரசு |
பொது எதிர்மின் அயனி | |
---|---|
ஐதரைடு | H− |
புளோரைடு | F− |
குளோரைடு | Cl− |
புரோமைடு | Br− |
அயோடைடு | I− |
ஆக்சைடு | O2− |
சல்பைடு | S2− |
நைட்ரைடு | N3− |
பொசுபைடு | P3− |
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- William Masterton; Cecile Hurley (24 January 2008). Chemistry: Principles and Reactions. Cengage Learning. பக். 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-495-12671-3. http://books.google.com/books?id=teubNK-b2bsC&pg=PT176.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.