ஒஸ்மா பெருங்கோவில்
ஒஸ்மா பெருங்கோவில் (Burgo de Osma Cathedral) என்பது மத்திய எசுப்பானியாவின், எல் பேர்கோ டி ஒஸ்மாவினில் (El Burgo de Osma) அமைந்துள்ள கோதிக் கட்டிடக்கலை அம்சத்துடன் கூடிய பெருங்கோவில் ஆகும். எசுப்பானியாவின் பாதுகாக்கப்பட்ட இடைக்காலக் கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] அத்துடன் 13 ஆம் நூற்றாண்டின் கோதிக் கட்டிடங்களுக்கு நல்லதோர் உதாரணமாக இதைக் கருதுகின்றனர்.[3] இதன் கட்டுமானப் பணிகள் 1232 ஆண்டு ஆரம்பித்து 1784 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இதன் கன்னிமடம் 1512 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அத்துடன் கோபுரம் 1739 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[4] இது புனித மரியாளுக்குரித்தான பேராலயம் ஆகும்.
ஒஸ்மா பெருங்கோவில் Cathedral of Burgo de Osma | |
---|---|
![]() ஒஸ்மா பெருங்கோவில் (Cathedral of Burgo de Osma) | |
அடிப்படைத் தகவல்கள் | |
புவியியல் ஆள்கூறுகள் | 41.585629°N 3.071°W |
சமயம் | கத்தோலிக்கம் |
மண்டலம் | கஸ்டிலே லியோன் |
மாகாணம் | சோரியா மாகாணம் |
ஆட்சிநிலம் | Roman Catholic Diocese of Osma-Soria |
செயற்பாட்டு நிலை | செயற்பாட்டிலுள்ளது |
கட்டிடக்கலை வகை | பெருங்கோவில் |
கட்டிடக்கலைப் பாணி | கோதிக், பரோக், நியூகிளாசிக் கட்டிடக்கலை |
அடித்தளமிட்டது | 1232 |
நிறைவுற்ற ஆண்டு | 1784 |
உயரம் (கூடிய) | 72மீ/236அடி[1] |
அருங்காட்சியகம்
இங்கு சமய ஓவியங்கள் பல காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- "Cathedral, El Burgo de Osma". Planetware.com. பார்த்த நாள் 2011-04-16.
- "Ancient descriptions of movement disorders: Cathedral el Burgo de Osma (Soria, Spain)". J. Neurol. 253 (6): 731–4. June 2006. doi:10.1007/s00415-006-0100-8. பப்மெட்:16511653.
- http://www.jstor.org/pss/4104302
- "El Burgo de Osma, Spain: tourism in El Burgo de Osma, Spain". Spain.info (2007-04-23). பார்த்த நாள் 2011-04-16.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.