ஒப்பேரா நடவடிக்கை
ஒப்பேரா நடவடிக்கை (Operation Opera, எபிரேயம்: אופרה)[1] அல்லது பாபிலோன் நடவடிக்கை[2] இசுரேலினால் 7 சூன் 1981 அன்று நடத்தப்பட்ட எதிர்பாராத வான் தாக்குதல் நடவடிக்கையாகும். இத்தாக்குதலில் ஈராக்கின் பாக்தாத் நகருக்கு 17 கி.மி. (10.5 மைல்) தூரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அணுக்கரு உலை அழிக்கப்பட்டது.[3][4][5]
ஒப்பேரா நடவடிக்கை | |
---|---|
பகுதி: அரபு-இசுரேல் முரண்பாடு | |
![]() தாக்குதல் வரைபடம் | |
நடவடிக்கையின் நோக்கம் | தந்திரோபாயம் |
இடம் | பாக்தாத், ஈராக் 33°12′30″N 44°31′30″E |
திட்டமிடல் | மெனசெம் பெகின் (பிரதம மந்திரி) டேவிட் இவ்ரி (வான் படைத் தளபதி) |
இலக்கு | "ஒசிரக்" அணுக்கரு உலையினை அழித்தல் |
திகதி | 7 சூன் 1981 |
செயற்படுத்தியோர் | ![]() |
விளைவு | வெற்றி, உலை அழிக்கப்பட்டது |
பாதிக்கப்பட்டோர் | 10 ஈராக்கிய படையினர் கொல்லப்படல் 1 பிரான்சியர் கொல்லப்படல் |
1976 இல் ஈராக் பிரான்சிடமிருந்து ஒசிரிஸ் வகுப்பு அணுக்கரு உலையினை வாங்கியது.[6][7] பிரான்சியப் பெயரான ஒசிரக் என்பதையே இருநாடுகளும் பயன்படுத்தி, சமாதான அறிவார்ந்த ஆய்வுக்காகவே செய்யப்படுவதாகக் கூறின.[8] இசுரேல் அதனைச் சந்தேகத்துடன் நோக்கி, அது அணு ஆயுதங்கள் உருவாக்க வடிவமைக்கப்பட்டதாகத் தெரிவித்தது.[3] 7 சூன் 1981 அன்று இசுரேலிய விமானப்படையின் எப்-15 களின் பயணப் பாதுகாப்புடன் எப்-16 தாக்குதல் விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தி, ஒசிரக் அணுக்கரு உலையினைப் பாரிய அழிவுக்குட்படுத்தின.[9] இசுரேல் தற்பாதுகாப்பிற்காக அதனைச் செய்ததாகவும், ஒரு மாதத்திற்கும் குறைந்த காலத்தில் அது ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பிருந்ததாகவும் கூறியது.[10] பத்து ஈராக்கியப் படையினரும் ஒரு பிரான்சிய நபரும் கொல்லப்பட்டனர்.[11]
குறிப்புக்கள்
- Perlmutter, p. 172.
- Amos Perlmutter, Michael I. Handel, Uri Bar-Joseph. Two Minutes over Baghdad. Routledge (2nd ed.), 2008. p. 120.
- "1981: Israel bombs Baghdad nuclear reactor". BBC News (British Broadcasting Corporation). 7 June 1981. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/june/7/newsid_3014000/3014623.stm. பார்த்த நாள்: 30 November 2010.
- Donald Neff (1995). "Israel Bombs Iraq's Osirak Nuclear Research Facility". Washington Report on Middle East Affairs (Andrew I. Kilgore): 81–82. http://www.washington-report.org/backissues/0695/9506081.htm. பார்த்த நாள்: 30 November 2010.
- Ramberg, Bennett. Nuclear Power Plants as Weapons for the Enemy: An Unrecognized Military Peril. University of California Press, 1985. p. xvii.
- Cordesman, Anthony H. Iraq and the War of Sanctions: Conventional Threats and Weapons of Mass Destruction. Praeger, 1999. p. 605.
- Shirley V. Scott, Anthony Billingsley, Christopher Michaelsen. International Law and the Use of Force: A Documentary and Reference Guide. Praeger, 2009. p. 182.
- Scott, p. 132.
- Polakow-Suransky, Sasha. The Unspoken Alliance: Israel's Secret Relationship with Apartheid South Africa. Pantheon (1 ed.), 2010. p. 145.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
- HUD video recording from two F-16s, including hit of two bombs at 1:07, YouTube
- Attack on Iraq’s Nuke Plant, American Heritage
- Osiraq / Tammuz I, Federation of American Scientists
- Israel's Air Strike Against The Osiraq Reactor: A Retrospective (பி.டி.எவ்), Temple International and Comparative Law Journal
- Osirak: Over the reactor, BBC News, 5 June 2006 (interview with pilots involved)
- Factfile: How Osirak was bombed, BBC News
- Operation Opera: An Ambiguous Success, Journal of Strategic Studies
- The Israeli aggression against the peaceful nuclear installations in Iraq : statement made by Dr. Sa'adoun Hammadi, Minister for Foreign Affairs of Iraq, before the Security Council, 12 June 1981